எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்

கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும் (புல 5:1). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, யூதா ஜனங்கள் பாபிலோனிய மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு, பாபிலோனில்  சிறைக்கைதிகளாக இருக்கிறார்கள். அங்கே அவர்கள் அநேக பாடுகளுக்கூடாகவும், வேதனைகளுக்கூடாகவும் கடந்து செல்ல வேண்டியிருந்தது, அவர்கள் இருந்த சூழ்நிலையை வார்த்தையினால் விபரிக்க முடியாது, அந்த அளவு துக்கங்களும், கண்ணீரும் அவர்களுடைய வாழ்க்கையை நிரப்பி இருந்தது, சிலர் தங்களுடைய தாய், தகப்பனை, இழந்து, அவர்களை விட்டுப் பிரிந்து, இன்னும் சிலர் தங்களுடைய மனைவி மற்றும் கணவனை இழந்த நிலையில், தங்களுடைய பிள்ளைகளை இழந்த நிலையில் , உறவினர்களை, நண்பர்பர்களை, தங்களுடைய உடமைகளை, வீடுகளை இழந்த நிலையில் வாழ்க்கையில் பாடுகளையும், நிந்தைகளையும் அனுபவித்துக்கொண்டிருந்தார்கள், அவர்களுடைய வாழ்க்கை துக்கத்தினாலும், வேதையினாலும், கண்ணீராலும் நிறைத்திருந்தது. தங்களுடைய பாவத்தின் நிமித்தம் தான் அவர்களுக்கு இந்த ‘நிந்தை’ வாழ்க்கையில் வந்திருக்கிறது என்பதை இபோது அங்கீகரிக்கிறார்கள், அவர்கள் ஜீவனுள்ள தேவன் ஜெகோவாவை விட்டு அந்நிய தேவர்களை சேவித்ததையும், அவர்களுக்கு தூபங் காட்டினத்தையும், விபச்சாரம் செய்ததையும், கர்த்தருக்கு விரோதமாக செய்த அத்தனை பாவங்களையும், நினைத்துப்பார்த்து மனந்திரும்பி கர்த்தரை நோக்கி ‘ கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும் எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்’ என்று கதறுகிறார்கள். அவர்களுடைய கதறலைக் கேட்ட தேவன்  அவர்கள் மீது மனதுருகி அவர்களை அவர்களுடைய நிந்தையில் இருந்து, பாடுகளில் இருந்து, உபத்திரவங்களிலிருந்து விடுதலை செய்கிறார். அல்லேலூயா ! நாம் ஆராதிக்கும் தேவன் மனதுருக்கம் நிறைந்தவர். அவர் நம்மை நேசிக்கிறார், உண்மையாய் அவருடைய சமூகத்தில் நாம் மனந்திரும்பும் போது அவர் எங்களுடைய பாவங்களை அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். பிரியமானவர்களே, நீங்களும் உங்களுடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்து, தேவ சமூகத்தில் அறிக்கையிடப்படாத ஏதாவது பாவங்கள் இருக்குமானால், இப்போதே தேவ சமூகத்தில் பாவஅறிக்கை செய்து கொள்ளுங்கள், அவர் உங்களுடைய பாவங்களையும் மன்னிக்க உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களுடைய பாவங்களுக்காக, அக்கிரமங்களுக்காக ஏற்கனவே கல்வாரி சிலுவையில் தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தி உங்களுடைய பாவத்துக்கான விலைக்கிரயத்தை செலுத்தி விட்டார், நீங்கள் எந்த பலியும் செலுத்த வேண்டிய அவசியமில்லை, நீங்கள் செய்ய வேண்டியது உங்களுடைய பாவங்களில் இருந்து மனந்திரும்பி தேவன் இயேசுவிடம் உங்களுடைய பாவங்களை அறிக்கை செய்து அவரை உங்களுடைய வாழ்க்கையில் ஆண்டவராக, இரச்சகராக ஏற்றுக்கொள்ளுவதே. அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?