மூன்று வார நாட்கள் (21 நாட்கள்) UK Lockdown - Day 3

அந்த நாட்களில் தானியேலாகிய நான் “மூன்று வாரமுழுவதும்” துக்கித்துக்கொண்டிருந்தேன். அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறுமட்டும் ருசிகரமான அப்பத்தை நான் புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை, நான் பரிமளதைலம் பூசிக்கொள்ளவுமில்லை (தானி 10 : 2 - 3 ). 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். 

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனமானது எந்த சூழ்நிலையில் எழுதப் பட்டிருக்கின்றது என்று சற்று சுருக்கமாக பார்ப்போம். 

பாபிலோன் தேசத்திலுள்ள யூதர்கள் அனைவரும்  தங்களுடைய சொந்த தேசத்துக்குப் திரும்பி  போகலாம் என்று  பாபிலோன் ராஜா ஆணை பிறப்பித்திருந்தார், ஆனால் யூதர்களில் சிலர் மாத்திரமே பாபிலோன் தேசத்திலிருந்து யூதாவுக்கு திரும்பி போனார்கள், அநேகர் தங்களுடைய சொந்த தேசத்துக்கு திரும்பிப் போக மனமில்லாமல் பாபிலோன் தேசத்திலே தங்கி விடுகிறார்கள். பாபிலோன் தேசத்திலிருந்து தங்கள் சொந்த தேசத்துக்குத் திரும்பிப் போனவர்கள் அங்கே தேவாலயத்தைக் கட்டும் கட்டுமான பணியை  ஆரம்பிக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு அநேக தடைகளும், எதிர்ப்புகளும், பிரச்சனைகளும் வந்து அவர்கள் ஆரம்பித்ததான தேவாலயத்தைக் கட்டும் பணி தடைப்பட்டுப் போகின்றது. இந்த சூழ்நிலையில் தனது முதிர் வயதில் தானியேல் மன வேதனை அடைந்து “மூன்று வாரம்” முழுவதும்  துக்கித்துக்கொண்டிருக்கும் பின்னணியிலே மேலே கூறப்பட்டுள்ள வேத வசனம் எழுதப்பட்டிருக்கின்றது. 

தானியேல் தன்னுடைய வாலிப பருவத்தில் தேவன் மீது வைத்திருந்த அன்பும்,  வைராக்கியமும் முதிர் வயதிலும் குறைவு பட்டுப் போகவில்லை. அவர் அந்த “மூன்று வார முழுவதும்” உபவாசம் இருந்து, தேவனுடைய சமூகத்தில் தன்னை ஒடுக்கி, தனது சொந்த பாவங்களுக்காகவும், யூதா ஜனங்களின் பாவங்களுக்காகவும் துக்கித்துக் கொண்டிருந்தார். வேதம் சொல்லுகிறது அவர் அந்த “மூன்று வாரங்களாகிய நாட்கள்” நிறைவேறுமட்டும் அவர் ருசிகரமான அப்பத்தை  புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சரசமும் அவர் வாய்க்குள் போகவுமில்லை, அவர் பரிமளதைலம் பூசிக்கொள்ளவுமில்லை என்று. அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, நாங்களும் தானியலைப் போல் எங்களால் முடிந்த அளவு இந்த “மூன்று வார நாட்களில்” தேவனுடைய சமூகத்தில் எங்களை நாம் ஒடுக்கி, நம்முடைய பாவங்களுக்காக, நாம் வாழுகின்றதான தேச மக்களின் பாவங்களுக்காக, நாம் பிறந்த தேச மக்களின் பாவங்களுக்காக, உலகத்தில் இருக்கும் அத்தனை தேச மக்களின் பாவங்களுக்காக தேவனை நோக்கி கதறி அழுது ஜெபிக்கும் போது, தேவன் தேசங்களின் மீது மனமிரங்கி தேச மக்களை அழிவிலிருந்து பாதுகாத்து தேசங்களுக்குள் விடுதலையையும், சமாதானத்தையும், ஆரோக்கியத்தையும், செழிப்பையும் கொண்டு வர அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா !

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடுமபத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?