பலமும், அன்பும், தெளிந்த புத்தியுமுள்ள ஆவியை கொடுத்திருக்கும் தேவன்

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் ( 2 தீமோ 1 : 7 ).

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.   

பிரியமானவர்களே, தேவன் அவருடைய பிள்ளைகளாகிய நமக்கு “பயமுள்ள ஆவியைக்” கொடுக்கவில்லை மாறாக (1 ) பலமுள்ள ஆவியையும் (2 ) அன்பு கூறுகிற ஆவியையும் (3 ) தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையும் கொடுத்திருக்கிறார். 

“பயமுள்ள ஆவி” -  பயம் தேவனிடம் இருந்து வருவதில்லை, அது பிசாசிடம் இருந்து வருகின்றது. “வருஷத்தில் 365  நாட்கள் உள்ளன. “Fear not “ என்ற வார்த்தையும் வேத புஸ்தகத்தில் 365 தடவைகள் இருக்கின்றது. தேவன் ஒவ்வொருநாளும் எங்களை பார்த்து சொல்லுகிறார் “பயப்படாதே” என்று. 

நாங்கள் இந்த பூலோகத்தில் நம்மை சுற்றி  நடக்கின்ற கொடூரமான, பயங்கரமான  காரியங்களைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. வேதத்தில் ஒரு சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது, தீக்கதரிசி எலிசாவின் ( Prophet  Elisha ) வேலைக்காரன் அவர்களை சுற்றி இருந்த பயங்கரமான காரியத்தைப் பார்த்து பயந்து எலிசாவிடம் சொல்லுகிறான் “ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம்” என்று. எலிசா அவனுக்கு சொல்லுகிறார் : “பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” என்று. அல்லேலூயா 

அந்த வேலைக்காரனைப் போலத் தான் இன்று   அநேகர் இந்த பூலோகத்தில் இந்த பூலோகத்தில் நடக்கும் காரியங்களைப் பார்த்து பயத்தோடு வாழுகிறார்கள். பிரியமானவர்களே, நம்முடைய எதிரியான பிசாசின் தந்திரங்களில் ஒன்று “ மனுஷர்களுக்கு பயத்தின் ஆவியைக் கொடுத்து அவர்களை வீழ்த்துவது. 

தீர்க்கதரிசி எலிசா “தேவனையும், அவருடைய வல்லமையையும், அவர் அவருடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கும் பாதுகாப்பையும்” நன்கு அறிந்திருந்த படியால் அவர் அவரைச்  சுற்றி இருந்த பயங்கரமான காரியத்தை பார்த்து பயப்படவில்லை. அவருடைய கவனம் எல்லாம் தேவன் மீது இருந்தபடியால், அவர் ஆபத்திலிருந்து  விடுவிக்கப்படடார்அல்லேலூயா ! 

அதேபோலத் தான் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ, தானியேல் போன்றவர்களும் அவர்களுடைய சூழ்நிலையைப் பார்த்து பயப்படவில்லை. அதனால் தேவன் அவர்களை அவர்களுடைய நெருக்கமான சூழ்நிலையிலிருந்து விடுவித்தார்.  அல்லேலூயா !

வேதம் சொல்லுகிறது, ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது (நீதி 24 : 10 ). என்று. முதலாவது நம்முடைய எதியான பிசாசு மனுஷருக்குள் அவிசுவாசத்தையும், பயத்தையும் கொடுக்கிறான் , அவ்வாறு ஒரு மனிதன் பயத்துக்கு இடம் கொடுக்கும் போது அவன் வாழ்க்கையில் சோர்ந்து பெலனற்றுப் போகிறான். 

வேதம் சொல்லுகிறது, தேவன் நமக்கு பயத்தின் ஆவியைக் கொடுக்காமல் அவர் நமக்கு ( 1 ) பயத்தை  மேட்கொள்ளுகிற “பலமுள்ள ஆவியையும்” (2 ) “மற்றவர்களிடத்தில் அன்பு கூறுகிற ஆவியையும்” (3 ) சூழ்நிலையை மேட்கொள்ள எங்களுக்கு தேவையாக  இருக்கும் “தெளிவாக சிந்திக்கும் அந்த தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையும்” கொடுத்திருக்கிறார் என்று. அல்லேலூயா ! 

ஆகவே பிரியமானவர்களே, நீங்கள் Coronavirus  பார்த்து பயந்து சோர்ந்து போகாமல் எலிசா, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ, தானியேல் போல் தேவன் மீது உங்களுடைய விசுவாசத்தை வையுங்கள். நமக்குள் இருக்கின்ற தேவன் இயேசு கொள்ளை virus யை பார்க்கிலும், நம்முடைய பிரச்னையைப் பார்க்கிலும் பெரியவர். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென் 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?