தேச மக்களுக்காகவும், தலைவர்களுக்காகவும், மருத்துவர்களுக்காகவும், ஜெபியுங்கள் UK Lockdown - Day 5
எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும் ( 1 தீமோ 2:1- 2).
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, அப்போஸ்தலனாகிய பவுல் எபேசு பட்டணத்திலுள்ள சபையார் மத்தியில் ஊழியம் செய்த தீமோத்தேயுக்கு எழுதின நிரூபத்தில் “எபேசு சபையார் எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும், ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும் என்று சொல்லி விட்டு, விஷேசமாக ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்” என்று புத்தி சொல்லுகிறார்.
காரணம் பவுல் மற்றும் தீமோத்தேயுவின் காலத்தில் அதிகாரத்திலிருந்த அதிகாரிகள் புறஜாதியினராக இருந்தார்கள், அவர்கள் இஸ்ரவேலின் காணியாட்சிக்குப் புறம்பானவர்கள். அவர்கள் எடுக்கிற தீர்மானத்திலே தேசம் தங்கியிருந்தது. அவர்கள் எடுக்கின்றதான ஒரு தவறான தீர்மானம் தேச மக்களின் சமாதானத்தையும், தேசத்தின் பொருளாதாரத்தையும் பாதித்து விடலாம் அதனால் தான் கர்த்தருடைய ஆவியானவர் பவுலின் மூலமாய் இந்த சத்தியத்தை வேத புஸ்தகத்தில் நமக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். அல்லேலூயா !
ஆகவே பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் நம்முடைய ஆபத்தான இன் நாட்களில், தேசங்களில் வாழும் எல்லா மனுஷர்களுக்காகவும், தேசத்தை ஆட்சி செய்கிற நம்முடைய தேசத்து தலைவர்களுக்காகவும், நமக்கு உயர் பதவியில் இருக்கிற அதிகாரிகளுக்காகவும், ஆபத்தான நாட்களில் தங்களுடைய உயிர்களை பணயம் வைத்து பணி புரியும் ஒவ்வொரு மருத்துவர்களுக்காகவும், nurse , மற்றும் ஒவ்வொரு front line workers இன் பாதுகாப்புக்காகவும், அவர்களுடைய குடும்பத்தாரின் பாதுகாப்புக்காகவும், மற்றும் அவர்களுடைய தேவைகளை கர்த்தர் சந்தித்து கொடுக்கும் படியாகவும், குறிப்பாக தேசத்து தலைவர்கள் இந்நாட்களில் எடுக்கும் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் சரியானதாகவும், கர்த்தருக்கு பிரியமானதாகவும் இருக்கும் படியாகவும் கர்த்தரை நோக்கி ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ண வேண்டும். அல்லேலூயா !
வேதம் சொல்லுகிறது, “ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்” ( நீதி 21:1).
பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் கொரோன வைரஸ் க்கு எதிராய் கர்த்தருடைய சமூகத்தில் முழங்கால் படியிட்டு விசுவாசத்தோடு தொடர்ந்து ஜெபிக்கும் போது இந்த 21 நாட்கள் முடியும் முதல் கர்த்தர் தேசத்தில் பெரிய காரியங்களை செய்ய அவர் வல்லமையுள்ளவராக இருக்கிறார். அவரால் முடியாத காரியம் ஒன்றுமில்லை, அவர் சகலத்தையும் தனது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அல்லேலூயா !
ஜெபமே ஜெயம் ! அல்லேலூயா !
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, அப்போஸ்தலனாகிய பவுல் எபேசு பட்டணத்திலுள்ள சபையார் மத்தியில் ஊழியம் செய்த தீமோத்தேயுக்கு எழுதின நிரூபத்தில் “எபேசு சபையார் எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும், ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும் என்று சொல்லி விட்டு, விஷேசமாக ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்” என்று புத்தி சொல்லுகிறார்.
காரணம் பவுல் மற்றும் தீமோத்தேயுவின் காலத்தில் அதிகாரத்திலிருந்த அதிகாரிகள் புறஜாதியினராக இருந்தார்கள், அவர்கள் இஸ்ரவேலின் காணியாட்சிக்குப் புறம்பானவர்கள். அவர்கள் எடுக்கிற தீர்மானத்திலே தேசம் தங்கியிருந்தது. அவர்கள் எடுக்கின்றதான ஒரு தவறான தீர்மானம் தேச மக்களின் சமாதானத்தையும், தேசத்தின் பொருளாதாரத்தையும் பாதித்து விடலாம் அதனால் தான் கர்த்தருடைய ஆவியானவர் பவுலின் மூலமாய் இந்த சத்தியத்தை வேத புஸ்தகத்தில் நமக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். அல்லேலூயா !
ஆகவே பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் நம்முடைய ஆபத்தான இன் நாட்களில், தேசங்களில் வாழும் எல்லா மனுஷர்களுக்காகவும், தேசத்தை ஆட்சி செய்கிற நம்முடைய தேசத்து தலைவர்களுக்காகவும், நமக்கு உயர் பதவியில் இருக்கிற அதிகாரிகளுக்காகவும், ஆபத்தான நாட்களில் தங்களுடைய உயிர்களை பணயம் வைத்து பணி புரியும் ஒவ்வொரு மருத்துவர்களுக்காகவும், nurse , மற்றும் ஒவ்வொரு front line workers இன் பாதுகாப்புக்காகவும், அவர்களுடைய குடும்பத்தாரின் பாதுகாப்புக்காகவும், மற்றும் அவர்களுடைய தேவைகளை கர்த்தர் சந்தித்து கொடுக்கும் படியாகவும், குறிப்பாக தேசத்து தலைவர்கள் இந்நாட்களில் எடுக்கும் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் சரியானதாகவும், கர்த்தருக்கு பிரியமானதாகவும் இருக்கும் படியாகவும் கர்த்தரை நோக்கி ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ண வேண்டும். அல்லேலூயா !
வேதம் சொல்லுகிறது, “ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்” ( நீதி 21:1).
ஜெபமே ஜெயம் ! அல்லேலூயா !
Comments
Post a Comment