கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் காப்பார்

கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார் (சங் 121:8 ). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இந்த சங்கீதத்தை தாவீது ராஜா எழுதியிருக்கிறார், இவர் கர்த்தர் மீது பெலமுள்ள விசுவாசத்தை வைத்திருந்ததோடு, இவர் தனது வாழ்க்கையில் எல்லா சூழ்நிலையிலிலும் கர்த்தரையே சார்ந்து வாழ்ந்தார், இவர் சொல்லுகிறார் ‘கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்’ என்று. அல்லேலூயா ! ஆம் பிரியமானவர்களே,   இந்த பூலோகத்தில் நாம் பரதேசியாய் சஞ்சரிக்குமளவும் நாம் இந்த பூலோகத்தில் அநேக பிரயாணங்களைச் செய்ய வேண்டியுள்ளது, சில பிரயாணங்களை நாம் வாழ்க்கையில் தவிர்த்துக்கொள்ளலாம், ஆனால் சில பிரயாணங்களை வாழ்க்கையில் நம்மால்  தவிர்த்துக் கொள்ள முடியாது, சங்கீதம் 104:23 இவ்வாறு சொல்லுகின்றது ‘ அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான்’ என்று, அவ்வாறு நாம் பிரயாணம் பண்ணும் போது, நம்முடைய போக்கு வரத்தில் நாம் விபத்துக்களையும், ஆபத்துக்களையும் சந்திக்க வேண்டிய நிலைமை நமக்கு வரலாம், ஆகவே பிரியமானவர்களே, நம்முடைய ஒவ்வொரு பிரயாணத்தையும் நாம் ஆரம்பிக்கும் முன்,  நம்முடைய பிரயாணத்தை நாம் கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுத்துவிட்டு பிரயாணத்தை நாம் செய்யும் போது, கர்த்தர் நம்முடைய போக்கையும், வரத்தையும் காக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கின்றார், அல்லேலூயா ! இன்று ஜனங்கள் ‘coronavirus ‘ நிமித்தம் பிரயாணம் செய்யப் பயப்படுகிறார்கள், ஆம் அனாவசியமற்ற பிரயாணங்களை நாம் வழ்கையில் தவிர்ப்பது நல்லது தான், ஆனால் வெளியே செல்லாமல் நீங்கள் வீட்டுக்குள் இருந்தால் உங்களுக்கு ஆபத்து வராது, கொள்ளை நோய் உங்களை தாக்க மாட்டாது என்பது எவ்வளவு தூரம் நிச்சயம்? பிரியமானவர்களே, நீங்கள் வீட்டுக்குள் இருந்தாலும் சரி, வெளியே நீங்கள் பயணித்தாலும் சரி கர்த்தரே உங்களை எல்லா சூழ்நிலைகளிலும் காக்கின்றார். அல்லேலூயா ! ஆகவே இன்று முதல் கர்த்தரிடம் உங்கள் பிரயாணத்தை ஒப்புக்கொடுத்து விட்டு, பிரயாணத்தை ஆரம்பியுங்கள், அவ்வாறு நீங்கள் செய்யும் போது கர்த்தர் உன் போக்கையும், உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார். அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.  

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?