தேவனே, எனக்கு இரங்கும்

தேவனே, எனக்கு இரங்கும் (சங் 56:1). 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் நாம் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். 

இந்த சங்கீதத்துக்கு “மிக்தாம்” என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. “மிக்தாம்” என்பதட்க்கு தங்கம் என்று பொருள், தங்கத்தைப் போல் இந்த சங்கீதத்திலுள்ள ஒவ்வொரு வாக்கியமும் அதிக மதிப்புள்ளது. அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, தாவீது எதிரிகளினால் நெருக்கப்படும் போது “தேவனே, எனக்கு இரங்கும்” என்று தேவனை நோக்கி கதறுகிறார்.பிரியமானவர்களே, தேவனுடைய இரக்கங்களை நாம் பெற்றுக்கொள்ளுவோமென்றால் எப்படிப் பட்ட சூழ்நிலையில் நாம் இருந்தாலும் எங்களால் ஜெயத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அவருடைய கிருபை, இரக்கம், அன்பு, தயவே எங்களை இந்நாளில் வாழ வைக்கின்றது. தாவீதை போல் நமக்கு எதிரிகள் இல்லாவிடிலும், நாம் போகின்றதான நெருக்கமான சூழ்நிலையை சந்திக்க நமக்கு கர்த்தருடைய இரக்கம் அதிகமாய் தேவைப்படுகிறது, அவருடைய இரக்கம் நம் மீது இருக்குமானால் எந்த தீய சக்திகளும், எந்த தீய மனிதர்களும், எந்த கொள்ளை நோய்களும் எங்களை மேட்கொள்ள முடியாது. அல்லேலூயா !

ஆகவே பிரியமானவர்களே, நாங்களும் தாவீதை போல் “தேவனே, எனக்கு இரங்கும்” என்று கர்த்தருடைய சமூகத்தில் கதறி அழுது அவருடைய இரக்கங்களை பெற்றுக்கொள்ளுவோம். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பெலத்தையும், சக்தியையும் தரும் தேவன்