கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; அவர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்

உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார் (சங் 121:3-5). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, இந்த வாரம் முழுவதுமாய் கர்த்தர் எங்களோடு Deadly  Coronavirus குறித்தே பேசிக் கொண்டு வருகின்றார். இன்றைக்கும் நான் தேவனுடைய வசனத்துக்காகக் காத்துக் கொண்டிருந்த போது கர்த்தர் என்னோடு 121  வது சங்கீதம் 3 ம் , 4 ம், 5 ம் வசனங்களோடு என்னோடு இடைப்பட்டார், அந்த மூன்று வசங்களையும் இன்றைய தினத்தில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். அல்லேலூயா ! பிரியமானவர்களே, கர்த்தர் தன் மீது விசுவாசம் வைத்திருக்கின்ற தன்னுடைய பிள்ளைகளின் காலை ஒரு போதும் அவர் தள்ளாட விடுவதில்லை, அதாவது கர்த்தர் ஒரு போதும் அவர் மீது விசுவாசம் வைத்து, அவருடைய சித்த த்தைச் செய்யும் அவருடைய பிள்ளைகளைக் கை விடுவதில்லை, அவர்களை அவர் உறங்காமல், தூங்காமல் காத்துக் கொண்டு வருகின்றார், நாம் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது நமக்கு வரப்போகின்றதான ஆபத்தை, நம்மை சூழ்ந்திருக்கின்றதான ஆபத்தை நாம் அறிவதில்லை, ஆனால் நம்மை சிருஷ்டித்த, நம்முடைய பாவங்களுக்காக மரித்து, மூன்றாம் நாள் உயிரோடெழுந்த நம்முடைய தேவன் இயேசுவோ நமது வலது பக்கத்திலே நமக்கு நிழலாயிருந்து உறங்காமல், தூங்காமல் நம்மை ஒவ்வொரு செக்கனும், ஒவ்வொரு கணப்பொழுதும் ஆபத்திலிருந்து காத்துக் கொண்டு வருகின்றார். அல்லேலூயா !     பாருங்கள் எவ்வளவு அன்பும், கரிசனையும் எங்கள் மீது அவர் வைத்திருக்கிறார் என்று. அவ்வளவு உங்கள் மீது அன்பாயிருக்கிற தேவன் Deadly Coronavirus உங்களை அணுக விடுவாரோ? இல்லவே இல்லை, அவர் (தேவன் இயேசு) இந்த கொடிய Coronavirus பார்க்கிலும் பெரியவர். அல்லேலூயா ! ஆகவே பிரியமானவர்களே அவர் மீது விசுவாசம் வைத்து அவரையே சார்ந்திருக்கிற உங்களுடைய காலை அவர் ஒரு போதும் தள்ளாட விட மாட்டார். அவர் உங்களைக் காத்து உங்களுடைய தேவைகளை அந்த அந்த நேரத்தில் சந்திப்பார். நீங்கள் வெட்கப் பட்டு போவதில்லை. அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?