ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது

ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது (நீதி 24:10)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.   





பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள Deadly Coronavirus  புள்ளி விபரங்களைப் பார்த்து பயந்து, சோர்ந்து போகாதீர்கள். வேதம் சொல்லுகிறது, “ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது” என்று. இந்த பூலோகத்தில் நாம் வாழும் நாளெல்லாம் நமக்கு போராட்டங்களும், உபத்திரவங்களும், சோதனைகளும் உண்டு. இயேசுவே சொல்லியிருக்கிறார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவா 16:33) என்று.  

ஆகவே பிரியமானவர்களே, நீங்கள் உங்களை சுற்றி இந்த பூலோகத்தில் நடக்கும் பயங்கரமான காரியங்களில் உங்களுடைய கவனத்தை  செலுத்தாமல், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மீது உங்களுடைய கவனத்தையும், நம்பிக்கையையும் வையுங்கள், அதட்க்காக இந்த பூலோகத்தில் நடக்கும் செய்திகளை கேட்கவும், பார்க்கவும் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை, அவற்றை பாருங்கள், கேளுங்கள், ஆனால் அவற்றை பார்த்து பயந்து சோர்ந்து போகார்த்தீர்கள். மாறாக இயேசு மீது உங்களுடைய விசுவாசத்தை வைத்து, அவருக்குள் மகிழ்ச்சியாக இருங்கள், அவரே நமக்குப் பெலன் (நெகமி 8:10). அவர் எல்லாவற்றையும் தனது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கிறார், அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுவார். அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார் “பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது”(சங் 91:10) என்று. அவர் உங்களுடைய “பிரச்னையைப்” பார்க்கிலும், கொள்ளை நோயாகிய “Coronavirus “ பார்க்கிலும் பெரியவர், அவர் உங்களை எல்லா தீங்குக்கும் விலக்கிப் பாதுகாப்பார், அல்லேலூயா ! 

ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.  

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?