கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது

தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது (சங் 33:18-19)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, கர்த்தர் “தமக்கு பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கும் ஜனங்களுக்கு அவர் “ இரண்டு ஆசீர்வாதங்களை” கொடுப்பதுக்கு அவர்கள்மேல் அவர் கண்ணை நோக்கமாக வைத்திருக்கிறார்.

(1 ) அவர்களுடைய ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கிறார்

( 2 ) பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கின்றார்

(1 ) அவர்களுடைய ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கிறார்  -

பிரியமானவர்களே, மனுபுத்திரர் எல்லாருக்கும் மரணம் வரும், இது சரீர மரணம், எந்தவொரு மனுஷனும் தன்னை சரீர மரணத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியாது, கர்த்தர் மனுஷனுக்கு சரீர மரணத்தை நியமித்திருக்கிறபடியால் அவனவன் கர்த்தரால்  நியமித்திருக்கிற நாளில் மரணத்தை சந்திக்கவேண்டியதாயிருக்கிறது, ஒரு தரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது. ஆனால், கர்த்தர் தமக்குப் பயந்து, அவர் கிருபைக்குக் காத்திருக்கிற மனுபுத்திரர்களின் ஆத்துமாக்களை அவர் நித்திய மரணத்துக்கு விலக்கிப் பாதுகாக்கிறார். யோவான் 11 ஆம் அதிகாரம் 25  ம் வசனத்தில் இவ்வண்ணமாய் வாசிக்கிறோம் “இயேசு அவளை (மார்த்தாளை) நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்” என்று. இங்கு நம்முடைய ஆண்டவாருகிய இயேசு கிறிஸ்து “நித்திய ஜீவனைக்” குறித்து பேசுகிறார், கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒன்றை மறந்து விடக்கூடாது, இந்த பூலோகத்தில் நாம் சரீர பிரகாரமாக மரித்த பிறகு, நமக்கு “பரலோகத்தில் தேவன் இயேசுவோடு நித்தியம், நித்தியகாலமாக வாழும் வாழ்க்கை” ஒன்று உண்டு. அதுவே கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கின்றதான பிரதான ஆசிர்வாதம். அல்லேலூயா !

( 2 ) பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கின்றார் -

பிரியமானவர்களே, இந்த ஆசிர்வாமானது  தமக்கு பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கும் ஜனங்களுக்கு கர்த்தர் கொடுக்கும் பூலோக ஆசிர்வாதம். பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கின்றார் என்பதன் அர்த்தம் அவர்களை கர்த்தர் “இந்த பூலோகத்தில் பாதுகாத்து பராமரிப்பதைக்” குறிக்கின்றது. அது பஞ்சம் மாத்திரமல்ல, பஞ்சமாக இருக்கலாம், அல்லது கொள்ளை நோயாக (Pestilence like Coronavirus) இருக்கலாம் அல்லது வேறு ஆபத்தாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் கர்த்தர் தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களை அவர் உயிரோடே காக்கின்றார். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆயிர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?