பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை

பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை (நீதி 27:20).

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.   

பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கின்றதான ஆசிர்வாதத்தில், வேலையில், பணத்தில்  திருப்தியாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். சிலர் தங்களுக்கு இருக்கின்ற பணத்தில், செல்வதில், சொத்தில் திருப்தியாக இருக்க மாட்டார்கள். வேதம் சொல்லுகிறது “ போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” என்று. தேவன் நமக்கு கொடுக்கின்றதான ஆசிர்வாதத்தில் திருப்தியாக இருக்க கற்றுக்  கொள்ள வேண்டும். அந்த திருப்தி தேவனிடத்தில் இருந்து வருகின்றது. அல்லேலூயா ! 

வேதம் சொல்லுகிறது, “ பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை” என்று. பாதாளம் பிசாசுக்கு சொந்தமானது, பாவம் செய்கின்றதான ஆத்துமாவே பாதாளத்துக்கு செல்லும், தன்னிடத்தில் எத்தனை பேர் வந்தாலும் பாதாளம் திருப்தியாகிறதில்லை, சிலருக்கு கர்த்தர் கொடுத்திருக்கின்றதான ஆசிர்வாதத்தில் ஒரு போதும் திருப்தி படமாட்டார்கள் , அந்த திருதியின்மை பாதாளத்தில் இருந்து அதாவது பிசாசிடம் இருந்து வருகின்றது. 

பிரியனானவர்களே, கண்கள் மற்றவர்களுக்கு இருக்கின்ற ஆசிர்வாதத்தை பார்த்து இச்சிக்கிறது, ஒருவேளை இச்சிக்கிறதை பெற்றுக் கொண்டாலும் மனுஷனுடைய கண்களும் பாதாளமும், அழிவும் திருத்தியாகாமலிருப்பது போல் திருப்தியாகிறதில்லை. 

வேதத்தில்ஒரு சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது ‘அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து:யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக்கண்டான்.கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போகும் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது. அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு, கிழக்கே பிரயாணப்பட்டுப்போனான். இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள் (ஆதி 13:10-11) லோத்தின் கண்கள் செழுமையை பார்த்து இச்சித்தது, இந்த கண்களின் இச்சை பிசாசிடம் இருந்து வருகின்றது,  நடந்தது உங்களுக்குத் தெரியும் அவனுடைய கண்களுக்கு செழுமையாக காணப்படட இடத்தில இருந்த ஆபத்து அவனது கண்களுக்குத் தெரியவில்லை, கண்களின் இச்சை, ஜாக்கிரதை பிரியமானவர்களே.

பிரியமானவர்களே, ஒரு போதும் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை மற்றவர்களுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்கார்த்தீர்கள், கர்த்தர்உங்களுக்கு கொடுத்திருக்கின்றதான ஆசிர்வாதங்களுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்தி அதில் திருப்தியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.  

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?