தேவன் எப்படிப்பட்ட மனுஷர்களை தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுகிறார்? (UK Lockdown - Day 2)

தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார் (2 தெசலோ 3:3b).

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். 

பிரியமானவர்களே, இன்றைக்கு தேவன் எப்படிப் பட்ட மனுஷர்களை தேவன் தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுகிறார் என்று தியானித்துக் கொள்ளுவோம். 

(1) தேவ சித்தத்துக்குக் கீழ்ப்படிந்து, தேவனுடைய சித்தத்தை செய்பவர்களை தேவன் தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுகிறார். யோசேப்பு, தாவீது  

(2) தம்மீது விசுவாசம்/நம்பிக்கை வைத்திருக்கிறவர்களை தேவன் தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுகிறார். மூன்று எபிரேய வாலிபர்கள், தானியேல், தாவீது

(3) தமக்குப் பயந்து நடக்கிறவர்களை தேவன் தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுகிறார். யோசேப்பு, தானியேல்

(4) தமக்கு முன்பாக பரிசுத்தமாக ஜீவிப்பவர்களை தேவன் தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுகிறார். தானியேல், யோசேப்பு 

(5) தம்மை கனப்படுத்துகிறவர்களை தேவன் தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுகிறார். யோசேப்பு, தாவீது, தானியேல்

(6) தம்முடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிறவர்களை தேவன் தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுகிறார். மோசே

(7) தம்முடைய நியமனங்களை, கடடளைகளை கடைப்பிடிக்கிறவர்களை தேவன் தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுகிறார். மோசே, தானியேல்

(8) தம்மை முழுஇருதயத்தோடு ஆராதிக்கிறவர்களை தேவன் தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுகிறார். தாவீது

(9) தம்மை நோக்கி கூப்பிடுகிறவர்களை/ ஜெபிக்கிறவர்களை தேவன் தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுகிறார். யாக்கோப்பு, தாவீது, தானியேல்

(10) தமது ஊழியத்தை உண்மையும், உத்தமுமாக செய்பவர்களை தேவன் தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுகிறார். எலியா, எலிசா 

பிரியமானவர்களே, நீங்களும், நானும் மேலே கூறப்பட்டுள்ள தேவ மனிதர்களை போல் எங்களுடைய வாழ்க்கையை தேவனுக்கு முன்பாக அமைத்துக்கொள்ளும் போது தேவன் எங்களையும் கொரோன வைரஸ் மற்றும் எல்லா வித தீங்குக்கும் விலக்கிக் காத்துக் கொள்ளுவார். 

கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார் (சங் 121 : 7 ) 

தேவன் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments