காருணியம் என்னுங் கேடகத்தினால் பாதுகாக்கும் தேவன் UK Lockdown - Day 8

கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர் (சங் 5:12) 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். 

பிரியமானவர்களே, யுத்த வீரர்கள் யுத்தத்துக்குச் செல்லும் போது கேடகத்தை பயன்படுத்துவார்கள். தங்களுக்கு ஆபத்து எந்த பக்கத்திலிருந்து வருகின்றதோ அந்தப் பக்கமாக அவர்கள் தங்களுடைய கேடகத்தை திருப்பி தங்களை பாதுகாத்துக் கொள்ளுவார்கள். கேடகம் அவர்களை ஒரு நேரத்தில் ஒரு திசையில் மாத்திரமே பாதுகாக்கும். 

ஆனால் கர்த்தர் தன் மீது விசுவாசம் வைத்திருக்கிற தன்னுடைய பிள்ளைகளுக்கு    “காருணியம் என்னுங் கேடகத்தை” கொடுத்திருக்கிறார், கர்த்தருடைய காருணியம் என்னும் கேடகம் யுத்த வீரர்கள் பயன்படுத்தும் கேடகம் போல் ஒரு வேளையில் ஒரு திசையின் பக்கத்திலிருந்து பாதுகாப்பை அவர்களுக்கு கொடுக்காமல், அவர்களை ஒரே நேரத்தில் எல்லாத் திசைகளிலிருந்தும் பாதுகாக்கின்றது. அல்லேலூயா ! 

அவ்வாறு கர்த்தருடைய காருணியம் என்னும் மெய்யான பாதுகாப்பு கேடகம் அவர்களுக்கு இருக்கும் போது எந்த தீங்கும், எந்த கொள்ளைநோயும் அவர்களை அணுக முடியாது.  ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது (சங் 91:10). அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, இதை வாசித்துக்கொண்டிருக்கிற நீங்கள் ஒருவேளை   இயேசு கிறிஸ்துவை உங்களுடைய வாழ்க்கையில் ஆண்டவராக ஏற்றுக் கொள்ளாது இருப்பீர்களானால் இப்போதே உங்களுடைய நம்பிக்கையையும், விசுவாசத்தையும் இயேசு மீது வையுங்கள், அவர் உங்களையும்  காருணியம் என்னும் கேடகத்தினால் எந்த கொள்ளைநோயும் (கொரோன வைரஸ்), எந்தத் தீங்கும் உங்களை அணுகாத வண்ணம்   பாதுகாத்துக்கொள்ளுவார். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?