விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்

இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான். (நெகே 8:10b) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். நெகேமியா துக்கத்திலும், கவலையிலும் இருந்த இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்துச் சொல்லுகிறார் ‘ இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்’ என்று. பிரியமானவர்களே, ஒருவேளை நீங்களும்  உங்களுடைய வாழ்க்கையில் அல்லது இந்த பூலோகத்தில் நடக்கும் பயங்கரமான காரியங்களை பார்த்து பயந்து போய் இருக்கலாம். பிரியமானவர்களே, பயப்பட வேண்டாம், உங்களுடைய பாவங்களுக்காக மரித்து, மூன்றாம் நாள் உயிரோடெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்றும் உயிரோடு இருக்கிறார், அவர் சகலவற்றையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அவர் சொன்னால் ஆகும், அவர் கட்டளையிட்டால் நிட்கும், அவர் (ஆண்டவர் இயேசு கிறிஸ்து) Coronavirus யைப் பார்க்கிலும் பெரியவர். அல்லேலூயா ! அவரே நம்முடைய பெலம், அவரே நம்முடைய அடைக்கலம். சங்கீதம் 118:24 சொல்லுகிறது,” இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்”. என்று ஆகவே நீங்கள் எதைக் குறித்தும் விசாரப்படாமல் , கர்த்தருக்குள் நீங்கள் மகிழ்ச்சியாய் இருப்பதே உங்களுடைய பெலன். அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுவார். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?