நமது Hand sanitizer நம்மை Deadly Coronavirus இல் இருந்து பாதுகாக்குமா?

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, நேற்றைய தினத்தில் ‘coronavirus ‘ வைரஸ் எவ்வாறு, எங்கே இருந்து வந்தது என்று சுருக்கமாக பார்த்தோம், wuhan wet மார்க்கெட்டில் இருந்து தான் இது உருவாகியது என்று சொல்லியிருந்தேன், ஆனால் இது சம்பந்தமாக என்னோடு ஒரு சகோதரன் வாக்கு வாதம் பண்ணியிருந்தார், அவருடைய கருத்தின் படி இது மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் (man made virus) ஆனால் இது உண்மையல்ல, அசுத்தமான விலங்குகளின் மாமிசத்தை உண்டதன் நிமித்தமே இந்த வைரஸ் உருவாக்கியது, அப்படியென்றால் நீங்கள் என்னிடம் கேட்கலாம் அவர்கள் தானே இவ்வகையான அசுத்தமான மாமிசத்தின் உணவு வகைகளை பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக புசித்துக் கொண்டு வருகிறார்கள் என்று. நான் உங்களோடு வாக்குவாதம் பண்ண விரும்பவில்லை, இதெல்லாம் பிசானவனுடைய தந்திரங்கள், பிசாசானவனைக் குறித்து வேதம் இவானனமாய் சொல்லுகிறது  ‘அவன் திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்’ ( யோவா 10:10). Is Coronavirus man made ? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு Robert H. Shmerling, MD(Faculty Editor, Harvard Health Publishing ) அவர் கூறின பதில் - இல்லை, இது  மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல.  சமீபத்தில் மேற்கோள் காட்டப்பட்ட பல தவறான கருத்துக்களில் இதுவும் ஒன்றாகும். “ஒட்டகங்கள் மற்றும் வெளவால்கள் உட்பட பல வகையான விலங்குகளில் கொரோனா வைரஸ்கள் பொதுவானவை.  அரிதாக, இந்த கொரோனா வைரஸ்கள் மனிதர்களை உருவாக்கி பாதிக்கக்கூடும், பின்னர் மனிதர்களிடையே பரவக்கூடும் என்று கூறியிருந்தார். பிரியமானவர்களே, இது ஒரு ஆரம்பம் தான் வருங்காலத்தில் இதை விட கொடிய நோய்கள், ஆபத்துக்கள் பூலோகத்தில் இருக்கும் மனிதர்களை தாக்கப் போகின்றது. என்ன பயந்து போய் விட்டீர்களா? பல சமயங்களில் உண்மையை சொல்லும் போது பயம் வருவதுண்டு. அப்படியென்றால் Coronavirus க்கு தீர்வே இல்லை என்று கேட் கின்றீர்களா ? இயேசு சொல்லும் போது இவ்வண்ணமாய் சொல்லுகிறார் ‘ திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்’ என்று. அல்லேலூயா ! solution  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே. சங்கீதம் 91:2 -4 இவ்வண்ணமாய் சொல்லுகின்றது ‘ நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார். அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்’ என்று. ஆம் பிரியமானவர்களே, இந்த பிரபஞ்சத்தில் நம்மை சுற்றி அநேக ஆபத்துக்கள் சூழ்ந்திருக்கின்றன, ஆனால் கர்த்தரையே நம்பியிருப்பவவர்களுக்கு கர்த்தரே நமக்கு நல்ல பாதுகாப்பாக இருக்கிறார், அவர் உங்களைக் கொடிய நோய்களிலிருந்து, ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்க உண்மையுள்ளவராக இருக்கிறார், அவரே நமது அடைக்கலம், நாம் நம்பியிருந்த நம்முடைய நங்கூரம், அவர் உங்களை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார். அல்லேலூயா ! கோழி தன்னுடைய குஞ்சுகளுக்கு ஆபத்து வரும் போது தன்னுடைய குஞ்சுகளை தன்னிடமாக அழைத்து தன்னுடைய செட்டைகளின் கீழே வைத்து பாதுகாத்துக் கொள்ளும், கோழியின் செட்டைகளின் கீழிருப்பது கோழி குஞ்சுகளுக்கும் இதமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். தேவன் தன் பிள்ளைகளை பாதுகாப்பதைக் குறித்து பேசும் போது கோழி தன் குஞ்சுகளை தன் செட்டைகளின் கீழ் பாதுகாப்பதை உவமையாகச் சொல்லுகிறார், கோழியின் சிறகுகளும், செட்டைகளும் கோழி குஞ்சுகளுக்கு பாதுகாப்பானவை, ஆனாலும் செட்டைகளும், சிறகுகளும் பலவீனமானவைகள், இவைகள் எளிதில் முறிந்துவிடும், சிறகினாலும், செட்டையினாலும் எதிரிகளோடு யுத்தம் செய்ய முடியாது, தேவனுடைய பிள்ளைகளாகிய நாமும் தேவன் தனது  செட்டைகளை நம் மீது மூடுவதினால் பாதுகாப்பாக இருக்கிறோம் உண்மை தான் ஆனால் நம்முடைய எதிரியான பிசானவனுடைய தந்திரங்களோடு (கொள்ளை நோய்) யுத்தம் பண்ணுவதுக்கு நமக்கு இன்னும் மேலதிகமான பாதுகாப்பு தேவைப்படுகிறது, கர்த்தர் நமக்குத் தரும் அந்த மேலதிக பாதுகாப்புத் தான் ‘தேவனுடைய சத்தியம் நமக்கு பரிசையும் கேடகமுமாகும்’ அல்லேலூயா ! கர்த்தர் நம்மை கோழி தன் குஞ்சுகளை பாதுகாப்பது போலும் பாதுகாக்கிறார் அதேவேளை அவர் நம்மை ஒரு யுத்த வீரராகவும் தம்முடைய பரிசையினாலும், கேடகத்தினாலும் பாதுகாக்கிறார். அல்லேலூயா ! தேவனையே அடைக்கலமாக கொள்ளுபவர்கள் ஒருபோதும் வெட்கப் பட்டுப் போவதில்லை. கர்த்தரையே நம்புங்கள் அவர் உங்களை இந்த Coronavirus இல்  இருந்து உங்களை பாதுகாப்பார். அல்லேலூயா ! தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.  

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?