கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்

கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள் (சங் 125:1). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இந்த புதிய மாதத்தில் கர்த்தர் உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை கொடுக்கின்றார் ‘கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்’ என்று. அல்லேலூயா ! பிரியமானவர்களே, எருசலேமைச் சுற்றிலும் பர்வதங்கள் இருக்கின்றது, இந்தப் பர்வதங்கள் எருசலேம் நகரத்துக்குப் பாதுகாப்பாக, அரணாக இருந்திறது. சங் 125: 2 சொல்லுகின்றது ‘பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்’ என்று. எவ்வாறு பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் பாதுகாப்பாக இருக்கின்றதோ அதேபோல் கர்த்தருடைய பிள்ளைகளுக்கும், கர்த்தரே அவர்களைச் சுற்றிலும் ‘பர்வதமாக’ அதாவது அவர்களுக்குப் பாதுகாப்பாக, அரணாக இருக்கின்றார். அல்லேலூயா !  ‘எருசலேம் நகரத்துக்கு பாதுகாப்பாக இருக்கும் அந்த பர்வதங்கள்’ எவ்வாறு அசையாமல் எப்போதும் நிலைத்திருக்கின்றதோ, அதே போல் கர்த்தரை நம்புகிறவர்களும் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் ‘சீயோன் பர்வதத்தைப்போல்’ இருப்பார்கள், எருசலேம் நகரைச் சுற்றிலும் பாதுகாப்பாக இருக்கும் அந்த பர்வதங்கள் எவ்வளவு புயல் காற்று வீசினாலும் அசைக்கப்படுவதில்லை, அதேபோலத் தான் ‘கர்த்தரையே நம்பியிருக்கின்றவர்களுக்கும்’ வாழ்க்கையில் புயல் காற்று, சூறாவளி, சுனாமி போன்றதான பெரிய மலைகள் போன்றதான பிரச்சனைகள் வரும் ஆனால் அவர்கள் ஒருபோதும் ‘சீயோன் பர்வதங்களைப் போல் வாழ்க்கையில் அசைக்கப்படுவதில்லை’ ஏனென்றால் அவர்களுக்கு (கர்த்தரை நம்பியிருக்கிற அவர்களுக்கு) பாதுகாப்பாக, அரணாக இருக்கும் அந்த அசைக்க முடியாத பர்வதம் ‘ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே’ அல்லேலூயா ! இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் வாழ்க்கையில் எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரையே சார்ந்து அவரையே நம்பியிருப்பீர்களானால், நீங்களும் ‘அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப் போல்’ இருப்பீர்கள். அல்லேலூயா ! கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?