இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.
தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன். உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா 46:3-4).
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, கர்த்தர் சொல்லுகிறார், “தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்’. என்று, ஆம் பிரியமானவர்களே, கர்த்தர் உங்களை சிருஷ்டித்தது மாத்திரமல்ல, அவர் உங்களை தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை அவர் ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களை அவர் ஆபத்துக்களில் இருந்து தாங்கி வந்திருக்கிறார். அல்லேலூயா !
கர்த்தர் ‘அவர் உங்களை தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை அவர் ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களை அவர் ஆபத்துக்களில் இருந்து தாங்கி வந்தது மாத்திரமல்ல, அவர் சொல்லுகிறார் “உங்களை அவர் உங்களுடைய முதிர்வயதுவரைக்கும், உங்களுடைய நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்கி வருவேன்” என்று அல்லேலூயா !
பிரியமானவர்களே, கர்த்தர் அப்படியாகத்தான் நம்முடைய (ஆவிக்குரிய) இஸ்ரவேலின் முற் பிதாக்களை அவர்கள் தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் அவர்களுடைய முதிர்வயதுவரைக்கும் தாங்கி, ஏந்தி சுமந்து வந்தார். அல்லேலூயா !
பிரியமானவர்களே, கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளாகிய உங்களுக்கும் அவர் இங்கே மூன்று காரியங்களை அவர் செய்வதாக வாக்குப் பண்ணியிருக்கிறார்,
(1 ) “இனிமேலும் நான் உங்களை ஏந்துவேன்” - தாயின் வயிற்றில் நீங்கள் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி வந்த அவர் இனிமேலும் அவர் உங்களை ஏந்துவேன் என்று வாக்குப் பண்ணியிருக்கிறார். அல்லேலூயா !
சங்கீதம் 91:1 -12
“உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் (கர்த்தருடைய தூதர்கள்) உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்”
(2 ) “இனிமேலும் நான் உங்களை சுமப்பேன்”
தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களை சுமந்து வந்த அவர் இனிமேலும் அவர் உங்களை சுமப்பேன் என்று வாக்குப்பணியிருக்கிறார். அல்லேலூயா !
உபாகமம் 1:31
“ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே”
(3 ) “இனிமேலும் நான் உங்களை தப்புவிப்பேன்”
தாயின் வயிற்றில் நீங்கள் தோன்றினதுமுதல் உங்களை தப்புவித்து வந்த அவர் இனிமேலும் அவர் உங்களை தப்புவிப்பேன் என்று வாக்குப் பண்ணியிருக்கிறார். அல்லேலூயா !
சங்கீதம் 91:3
“அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்”
பிரியமானவர்களே, கர்த்தர் மீது விசுவாசம் வைத்திருக்கிற உங்களை அவர் கொள்ளை நோயாகிய Coronavirus க்கும், மற்றும் எல்லா நோய்களுக்கும் தப்புவிப்பர். அல்லேலூயா !
தானியேல் 3 : 17
“நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்”
பிரியமானவர்களே, கர்த்தர் மீது விசுவாசம் வைத்திருக்கிற உங்களை அவர் எல்லா தீங்குக்கும், ஆபத்துக்கும் விலக்கி பாதுகாப்பார். (சங் 121:7) அல்லேலூயா !
ஆகவே பிரியமானவர்களே, “நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல் ( கொள்ளை நோயாகிய Coronavirus , உங்களுடைய தேவைகள் மற்றும் உங்களுடைய எதிர்காலத்தைக் குறித்து கவலைப்படாமல் ) எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலி 4:6) கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுவார். அல்லேலூயா !
தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென் .
பிரியமானவர்களே, கர்த்தர் அப்படியாகத்தான் நம்முடைய (ஆவிக்குரிய) இஸ்ரவேலின் முற் பிதாக்களை அவர்கள் தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் அவர்களுடைய முதிர்வயதுவரைக்கும் தாங்கி, ஏந்தி சுமந்து வந்தார். அல்லேலூயா !
“அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்”
தானியேல் 3 : 17
“நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்”
ஆகவே பிரியமானவர்களே, “நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல் ( கொள்ளை நோயாகிய Coronavirus , உங்களுடைய தேவைகள் மற்றும் உங்களுடைய எதிர்காலத்தைக் குறித்து கவலைப்படாமல் ) எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலி 4:6) கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுவார். அல்லேலூயா !
தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென் .
Comments
Post a Comment