உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள் (UK Lockdown - Day 1)

என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள் (ஏசா 26:20). 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். 

பிரியமானவர்களே, ஏசாயா 26 ம் அதிகாரம் துதியின் கீதம் (26 :1-19) என்று அழைக்கப்படுகிறது. 

பிரியமானவர்களே, அங்கும், இங்கும் வெளியிலே அலைந்து கொண்டிருந்தால், வெளியிலே இருக்கும் ஆபத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் சிக்கிக் கொண்டு விடுவார்கள் என்பதை மனதில் வைத்து அவர்களுடைய  பாதுகாப்புக்காக ஏசாயா தீர்க்கதரிசி “என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டு கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்” என்று அவர்களுக்கு ஆலோசனை கொடுக்கின்றார்.

பிரியமானவர்களே, வேத வசனம் நமக்கு அழகாய் சொல்லுகிறது  “உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்” என்று.

ஆம் பிரியமானவர்களே, நாம் இப்பொது  அனுபவிக்கின்றதான இந்த பாடுகளும், வேதனைகளும் நமக்கு நிரந்தரமானவைகளல்ல, அவைகள் “கொஞ்ச நாட்கள்” மாத்திரமே நமக்கு இருக்கும்.

ஆகவே பிரியமானவர்களே, நாம் இந்நாட்களில்   அறைகளுக்குள்ளே பிரவேசித்து, கதவுகளைப் பூட்டிக் கொண்டு, கர்த்தருடைய சமூகத்தில் நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்த்து வேதனை உண்டாக்கும் வழிகள் நம்மிடத்தில் இருக்குமானால் அவற்றில் இருந்து மனந்திரும்பும் போது கர்த்தர் நம்முடைய தேசத்தில் க்ஷேமத்தைக் கட்டளையிட அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். “ என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்” (2 நாளா 7:13) அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?