தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன் UK Lockdown Day 7
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, சங்கீதம் 16ம் அதிகாரத்துக்கு மிக்தாம் என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது, மிக்தாம் என்னும் வார்த்தை பொற்பணதிக்கீதம் என்றும் அழைக்கப்படுகின்றது. பொற்பணதிக்கீதம் என்னும் வார்த்தைக்கு “பசும் பொன்னைப் போன்ற சுத்த கீதம்” அல்லது “சொக்கத் தங்கத்தைப் போன்று விலையேறப்பெற்ற கீதம்” என்று பொருள் சொல்லலாம். இந்த சங்கீதானது பசும் பொன்னைப் போல அதிக மதிப்புள்ளது.
தாவீது ஆபத்தான சூழ்நிலையில் இருந்த போது அவர் தேவனை நோக்கி “தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்” என்று கதறி அழுதார். அவருடைய கூக்குரலின் சத்தத்தைக் கேட்ட தேவன் தாவீதை அவருடைய ஆபத்தான சூழ்நிலையிலிருந்து காத்துக் கொண்டார்.
பிரியமானவர்களே, இன்று இந்த பூலோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஜனங்கள் ஒவ்வொருவரும் தாவீதை போல் உயிருக்குப் பயந்து (கொரோன வைரஸ்) ஆபத்தான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பிரியமானவர்களே, இந்த ஆபத்தான சூழ்நிலையிலும் நானும், என் குடும்பமும் பயப்படாமல் சந்தோஷமாக இருக்கிறோமென்றால் அதட்க்குக் காரணமே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே.
பிரியமானவர்களே, நீங்கள் ஒருவேளை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் ஆண்டவராக ஏற்றுக்கொள்ளாது இருப்பீர்களென்றால், இப்போதே உங்களுடைய பாவங்களுக்காக, அக்கிரமங்களுக்காக கல்வாரி சிலுவையில் மரித்து, மூன்றாம் நாள் உயிரோடெழுந்து இன்றும் ஜீவிக்கின்ற ஜீவனுள்ள தேவனை தாமதியாமல் உங்களுடைய வாழ்க்கையில் ஆண்டவராக ஏற்றுக் கொண்டு, நீங்களும் தாவீதை போல் தேவனை நோக்கி “தேவனே, என்னையும் இந்த கொள்ளைநோயாகிய கொரோன வைரஸ் இல் இருந்து காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்” என்று கூப்பிடும் போது தாவீதை அவருடைய ஆபத்தான சூழ்நிலையிலிருந்து காத்துக் கொண்ட தேவன் உங்களையும் கொள்ளை நோயாகிய கொரோன வைரஸ் இல் இருந்தும், ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள தேவன் வல்லமையுள்ளவராகவும், உண்மையுள்ளவராகவும் இருக்கிறார். அல்லேலூயா !
தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
தாவீது ஆபத்தான சூழ்நிலையில் இருந்த போது அவர் தேவனை நோக்கி “தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்” என்று கதறி அழுதார். அவருடைய கூக்குரலின் சத்தத்தைக் கேட்ட தேவன் தாவீதை அவருடைய ஆபத்தான சூழ்நிலையிலிருந்து காத்துக் கொண்டார்.
பிரியமானவர்களே, நீங்கள் ஒருவேளை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் ஆண்டவராக ஏற்றுக்கொள்ளாது இருப்பீர்களென்றால், இப்போதே உங்களுடைய பாவங்களுக்காக, அக்கிரமங்களுக்காக கல்வாரி சிலுவையில் மரித்து, மூன்றாம் நாள் உயிரோடெழுந்து இன்றும் ஜீவிக்கின்ற ஜீவனுள்ள தேவனை தாமதியாமல் உங்களுடைய வாழ்க்கையில் ஆண்டவராக ஏற்றுக் கொண்டு, நீங்களும் தாவீதை போல் தேவனை நோக்கி “தேவனே, என்னையும் இந்த கொள்ளைநோயாகிய கொரோன வைரஸ் இல் இருந்து காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்” என்று கூப்பிடும் போது தாவீதை அவருடைய ஆபத்தான சூழ்நிலையிலிருந்து காத்துக் கொண்ட தேவன் உங்களையும் கொள்ளை நோயாகிய கொரோன வைரஸ் இல் இருந்தும், ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள தேவன் வல்லமையுள்ளவராகவும், உண்மையுள்ளவராகவும் இருக்கிறார். அல்லேலூயா !
Comments
Post a Comment