கொள்ளை நோயாகிய ‘coronavirus’ உங்களை அணுகாது

ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது. உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் (சங் 91:10-12). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள மூன்று வேத வசனங்களையும் இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கொரோனவைரஸ் (coronavirus) இன் நிமித்தம் இன்று பூலோகத்தில் வாழும் ஜனங்கள் மத்தியில் பயமும், திகிலும், பதட்டமும்  உண்டாகியிருக்கிறது, இந்த கொள்ளை நோயின் நிமித்தம் பயந்து போய் இருக்கும் உங்களைப் பார்த்து கர்த்தர் சொல்லுகிறார்  ‘பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது’ என்று, அல்லேலூயா ! ஆம் பிரியமானவர்களே, நம்முடைய வாழ்க்கையில் நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவருக்குள் நாம் அடைக்கலமாய் இருக்கும் போது எந்த பொல்லாப்பும் நமக்கு நேரிடாது, எந்த வாதையும் நம்முடைய கூடாரத்தை அணுகாது, கர்த்தர் நம்முடைய வழிகளிலெல்லாம் நம்மைக் காக்கும் படி நமக்காகக் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார், அவர்கள் நம்முடைய பாதம் கல்லில் இடறாதபடிக்கு நம்மைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள். அல்லேலூயா ! ஆகவே பிரியமானவர்களே, நீங்கள் தேவன் இயேசுவை விசுவாசித்து, அவருக்குள் நீங்கள் அடைக்கலமாயிருக்கும்போது நீங்கள் ‘coronavirus‘ யைக் குறித்தோ, எந்த கொள்ளை நோய்களைக் குறித்தோ பயப்படத் தேவையில்லை, கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார் (சங் 121:7). அல்லேலூயா ! தேவன் இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள். தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?