மனித கண்களிலும், அதிகாரிகளின் கண்களிலும் தயவுகள் உண்டாக்கித் தரும் தேவன்

ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்ததினால், ராஜா தன் கையிலிருக்கிற பொற் செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள். (எஸ்தர் 5:2) எஸ்தர் ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்,  பிரியமானவர்களே, அகாஸ்வேரு ராஜா இந்து தேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளை அரசாண்ட மிகப் பெரிய ராஜா, அவரை யாருமே அவருடைய அனுமதியில்லாமல் சந்திக்க முடியாது, ராஜா ராஜாத்தியை அழைக்காவிடில், ராஜாதியாலும் ராஜாவை சந்திக்க முடியாது. ஆனால் இங்கே ராஜாதி எஸ்தர் பெர்சிய பிரமாணங்களையும் மீறி ராஜாவை சந்திக்கும் படி ராஜாவின் அரண்மனைக்குள் பிரவேசிக்கிறாள், வேதம் சொல்லுகிறது, ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவன் (ராஜா) கண்களில் தயை கிடைத்ததினால், ராஜா தன் கையிலிருக்கிற பொற் செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள் என்று. அல்லேலூயா ! ராஜா தன் கையிலிருக்கிற பொற் செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டியது தேவனுடைய கிருபை, அதனால் அவள் பெர்சிய தேசத்தின் மரணதண்டனைக்கு தப்பிக்கிறாள். அல்லேலூயா ! பிரியமானவர்களே, நம்முடைய தேவன் கிருபையும், இரக்கமும், அன்பும் நிறைந்தவர், அவர் நமக்கு மனித கண்களிலும், அதிகாரிகளின் கண்களிலும் தயவுகளை உண்டு பண்ணித் தருகிறார், ராஜாதி எஸ்தருக்கு ராஜா அகாஸ்வேருவின் கண்களில் தயவு கிடைத்தது தேவனின் கிருபை. அல்லேலூயா ! இன்றைய தினத்தில் எனக்கும், என் மனைவிக்கும் ஒரு appointment இருந்தது, நாங்கள் அங்கே செல்லுவதட்க்கு முன்பாக, நாங்கள் இரண்டு பேரும் தேவனிடம், அதிகாரிகளின் கண்களில் தேவன்தாமே தயவுகளை உண்டுபண்ணி தரும் படி ஜெபித்து விட்டு சென்றோம், கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக, கர்த்தர் எங்களது விண்ணப்பத்துக்கு செவி கொடுத்து, என் மனைவிக்கும், எனக்கும் அதிகாரிகளின் கண்களில் தயவு கிடைக்க உதவி செய்திருந்தார், அல்லேலூயா ! பிரியமானவர்களே, தேவனே நமக்கு மனித கண்களில் தயவு உண்டுபண்ணித் தருகிறார். தேவனை விசுவாசியுங்கள். தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?