எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, இந்நாட்களில் நாங்கள் எங்கு சென்றாலும் சரி , எங்கு திரும்பினாலும் சரி ஜனங்கள் “கொரோனா வைரஸைப்” பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த வைரஸ் ஜனங்களை தாக்கி அழித்துக் கொண்டிருக்கின்றது.

இன்றைய தினத்தின் புள்ளி விபரத்தின் படி இதுவரைக்கும் உலகத்தில் 252,187  பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 10,405  பேர் இந்த கொள்ளை நோயினால் மரித்தும் இருக்கிறார்கள். 
ஆகவே இது தொடர்பாக வேதம் என்ன ஆலோசனை எங்களுக்கு சொல்லுகின்றது என்று இன்றும் இரண்டு வசனங்களைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்போம். 

எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன் (ரோமர் 13:1)

பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்” என்று. ஆகவே பிரியமானவர்களே, எங்களுடைய ஆபத்து நாட்களில் கர்த்தர் நம்மை பாதுகாப்பார் தானே என்று அசதியாய், ஏனோதானோவென்று இருக்காமல், வேத வசனத்துக்கு கீழ்ப்படிந்து கர்த்தர் மீது நம்முடைய விசுவாசத்தை வைத்து,  எங்கள் பாதுகாப்பிற்காக அரசாங்கம், மற்றும் NHS வழங்கியிருக்கின்றதான எல்லா வழிமுறைகளையும் நாங்கள் பின்பற்றும் போது கர்த்தர் எங்களை இந்த கொள்ளை நோயாகிய கொரோனா வைரஸ் இல் இருந்து பாதுகாத்துக்கொள்ள அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார்.  

கர்த்தருடைய பாதுகாப்பைக் குறித்து வேதம் சொல்லும்போது சங்கீதம் 17:8 இவ்வண்ணமாய் சொல்லுகின்றது “அவர்  தன்னுடைய கண்மணியைப்போல எங்களைக் காக்கின்றார்” என்று.

ஆம் பிரியமானவர்களே, கர்த்தர் மீது விசுவாசம் வைத்து எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரையே  சார்ந்திருக்கின்ற அவருடைய பிள்ளைகளை கர்த்தர் தன்னுடைய கண்மணியைப் போல் காக்கின்றவராக இருக்கின்றார்.

ஆகவே பிரியமானவர்களே, நாங்கள் எதட்க்கும் பயப்படாமல் கர்த்தரையே சார்ந்து, அவர் மீது நம்முடைய விசுவாசத்தை வைத்து, வேதம் சொல்லுகிற பிரகாரம் எங்களுக்கு மேலான அதிகாரத்திலுள்ளவர்களாகிய நம்முடைய  தேசத்து அரசாங்கம், மற்றும் NHS நமக்கு வழங்கியிருக்கின்றதான எல்லா வழிமுறைகளுக்கும் நாங்கள் கீழ்ப்படிந்து அவற்றை பின்பற்றும் போது, கர்த்தர் தன்னுடைய கண்மணியைப் போல் எங்களை எல்லா தீங்குக்கும், கொள்ளை நோய்களுக்கும், ஆபத்துக்களுக்கும் விலக்கிப் பாதுகாக்கிறார். அல்லேலூயா !

கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.  

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?