நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்

நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன் (யாத்தி 15:26)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். 

பிரியமானவர்களே, மோசேயின் நாட்களில் தேவன் அவருடைய பிள்ளைகளாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்கு மேலே கூறப்பட்டுள்ள வாக்குத்தத்தத்தை கொடுத்தார். 
இன்றைக்கு யார் யாரெல்லாம் இயேசுவின் பரிசுத்த இரத்தத்தினால் கழுவப்பட்டு, அவரால் மீட்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் ஒவ்வொருவருக்கும் மேலே கூறப்பட்டுள்ள வாக்குத்தத்தமாது சொந்தமாக இருக்கின்றது. 

பிரியமானவர்களே, “நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்” என்று வாக்குக் கொடுத்திருக்கிற தேவன் அவர் தனது வார்த்தையில் உண்மையுள்ளவராக இருக்கிறார், ஆனால் தேவனுடைய வாக்குத்தத்தம் நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற வேண்டுமானால் அவர் நமக்கு கொடுத்திருக்கிற கடடளையையும் நாம் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாய் இருக்கின்றது. அவர் சொல்லுகிறார் “நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்” என்று. 

ஆகவே பிரியமானவர்களே, நாமும் தேவனுடைய பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொள்ளுவோம், அவ்வாறு நாம் அவருடைய நியமங்களை கைக்கொள்ளும் போது தேவன் நம்முடைய வாழ்க்கையிலிலும் எந்த வியாதிகளும், எந்த கொள்ளை நோய்களும் அணுகாத வண்ணம் அவர் நம்மை காத்து வழிநடத்த அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார் . அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?