தேசங்களுக்காக ஜெபியுங்கள் UK Lockdown - Day 4

நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும் (எரேமி 29 : 7 )

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனமானது எந்த சூழ்நிலையில் எழுதப் பட்டிருக்கின்றது என்று சற்று சுருக்கமாக பார்ப்போம்.

யூதா ஜனங்களும், எருசலேமின் குடிகளும்  கர்த்தரை மறந்து அவருக்கு விரோதமாக பாவம் செய்த போது, கர்த்தர் அவர்களை பாபிலோன் ராஜாவின் கைக்கு ஒப்புக் கொடுத்ததினால், அவன் இவர்களை சிறை கைதிகளாக  சிறைப்பிடித்துக்கொண்டு பாபிலோனுக்கு கொண்டு சென்றான். அங்கே அவர்கள் “கர்த்தருடைய நாமத்தில் கள்ள தீர்க்க தீர்க்கதரிசிகள் சொன்ன வார்த்தைக்கு செவி கொடுத்து, சீக்கிரமாய் தங்களுக்கு பாபிலோன் சிறையிருப்பிலிருந்து விடுதலை கிடைக்கப் போகின்றது என்று நம்பி, தாங்கள் சிறையிருப்பில் இருந்த பாபிலோன் தேசத்தில் கர்த்தரை நோக்கி பார்க்காமல், மற்றும் தங்களுடைய அன்றாட கடமைகளை செய்யாமல் சோம்பேறிகளாக இருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில் தான் எரேமியா தீர்க்கதரிசி எருசலேமில் இருந்து, கர்த்தர் தன்னோடு “பாபிலோன் தேசத்தில் சிறையிருப்பிலிருந்த யூதா ஜனங்களுக்கும், எருசலேமின் குடிகளுக்கும்”அறிவிக்கும் படி பேசின மேலே கூறப்பட்டுள்ள வார்த்தைகளை நிருபத்தில் எழுதினார்.

அவர் தன்னுடைய நிருபத்தில் கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக கர்த்தர் சொன்ன வார்த்தைகளை சிறையிருப்பில் இருந்த யூதா சிறை கைதிகளுக்கு அறிவித்து, அவர்களை கர்த்தர் அனுப்பவில்லை என்றும்,  கள்ளத் தீர்க்கதரிசிகள் சொன்ன பிரகாரம் அவர்களுக்கு சீக்கிரமாக விடுதலை கிடைக்கப் போவதில்லையென்றும், 70 வருடங்கள் அவர்கள்  பாபிலோன் தேசத்தில் சிறை கைதிகளாக சிறையிலிருக்க போவதால் அவர்கள் அங்கே அவர்களுக்கு வீடுகளைக் கட்டி, தோட்ட்ங்களை நாட்டி, விவாகம் பண்ணி   அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை பாபிலோன் தேசத்தில் ஆரம்பிக்கும் படி கர்த்தர் அவர்களுக்கு சொல்லுவதாக எழுதினார்.

அதுமாத்திரமல்ல, அவர்கள் சிறை பட்டு போன பட்டணத்தின் சமாதானத்துக்காக அவர்கள் விண்ணப்பம் பண்ண வேண்டும் என்றும் அதற்குச் சமாதானமிருக்கையில் தான் அவர்களுக்கும் வாழ்க்கையில் சமாதானமிருக்கும் என்றும் சொல்லுகிறார். அல்லேலூயா !
பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் நாங்கள் வாழுகின்றதான பட்டணத்தின் சமாதானத்துக்காகவும், தேசத்தின் சமாதானத்துக்காகவும் நாங்கள் ஜெபிக்க வேண்டியது எங்களுடைய கடமை. தேசம் சமாதானமாக இருந்தால் தான் நாங்கள் சமாதானமாக தேசத்தில் வாழ முடியும்.

ஆகவே பிரியமானவர்களே, எங்களுடைய ஆபத்தான இந்நாட்களில் சிறைக் கைதிகள் போல் 21 நாட்கள் வீட்டுக்குள் அடைபட்டு இருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் கர்த்தரை நோக்கி தேசங்களுக்கு விரோதமாக கிரியை செய்யும் எல்லா பாதாளத்தின் கிரியைகளையும், எல்லா அந்தகாரத்தின் வல்லமைகளையும், பிசாசின் கிரியைகளைகளையும் கர்த்தர் நிர்மூலமாகிப் போடும்படியாகவும், தேசங்களின் பொருளாதாரம் விழுந்து போகாத படி கர்த்தர் தாமே தேசங்களின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் படியாகவும், கொள்ளை நோயாகிய கொரோன வைரஸ் இல் இருந்து தேச மக்களை கர்த்தர் காத்து, கர்த்தர் தேசங்களை சமாதானத்தினால் நிரப்பும்படியாக ஜெபிப்போம். அல்லேலூயா !

தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?