தேவன் தாம் ஆரம்பித்த காரியத்தை அவருடைய வேளையில் செய்து முடிக்கின்றார்

தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி (ஆதி 2:2). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, ஆவியானவர் இன்றைக்கு என்னோடு இந்த வசனத்தின் ஊடாகப் பேசினார், அவற்றை உங்களுக்காக நான் பகிர்ந்து கொள்ள விருப்புகின்றேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இரண்டு  பகுதிகளாக உடைக்க விரும்புகின்றேன், (1) தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை (2) ஏழாம் நாளிலே நிறைவேற்றி. இந்த இரண்டு பகுதிகளையும் நான் இப்பொழுது உங்களுடைய வாழ்க்கையில் தொடர்புபடுத்திப் பேசப் போகிறேன். (1) தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை (the work he (God) had started) -  தேவன் உங்களுடைய வாழ்க்கையில் செய்ய ஆரம்பித்த காரியத்தை என்று பொருள் (2) ஏழாம் நாளிலே நிறைவேற்றி (on the seventh day he (God) ended his work) -  இதன் அர்த்தம் தேவன் உங்களுடைய வாழ்க்கையில் செய்யும் படி ஆரம்பித்த அந்த நல்ல காரியத்தை, அவர் நியமித்திருந்த நாளில் செய்து முடிக்கிறவராகவும் இருக்கிறார். அல்லேலூயா ! தேவன் உங்களுடைய வாழ்க்கையில் செய்ய வேண்டும் என்று ஆரம்பித்த அந்த நல்ல காரியத்தை, அவருடைய நாளில் செய்து முடிகிறவராக இருக்கிறார். அல்லேலூயா ! அவர் தான் ஆரம்பித்த எந்த ஒரு காரியத்தையும் பாதியில் கை நிறுத்தி விடுபவரல்ல , அதை அவருடைய நாளில் செய்து முடிக்கிறவராகவும் இருக்கிறார். அவர் உங்களுடைய வாழ்க்கையில்  ஆரம்பித்திருக்கிற காரியத்தை, அவர் அவருடைய வேளையில் அவருடைய நாமம் மகிமைப்படும் படியாக செய்து முடிகிறவராக இருக்கின்றார். அல்லேலூயா ! தேவனை விசுவாசியுங்கள், உங்களுடைய காரியம் சித்தியாகும். அல்லேலூயா ! தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?