திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர் (சங் 93:4)
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, இந்த சங்கீதத்தைப் பாடிய சங்கீதக்காரன் திரளான தண்ணீர்களின் இரைச்சலையும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளையும் கர்த்தரின் வல்லமையோடு ஒப்பிடுப் பேசுகிறார். அவர் சொல்லுகிறார் “திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர்” என்று. அல்லேலூயா !
பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தர் இயேசு கிறிஸ்து காற்றையும், கடலையும் பார்த்து இரையாதே அமைதலாயிரு என்று சொன்ன போது காற்றும், கடலும் அவருக்கு கீழ்ப்படிந்தது, அவர் சகலத்தையும் ஆளுகை செய்கிறார். அல்லேலூயா !
பிரியமானவர்களே, கர்த்தர் நம்மை ஆளுகை செய்யும் போது நாம் திரளான தண்ணீர்களின் இரைச்சலைப் பார்த்தோ, சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப் பார்த்தோ பயப்பட வேண்டிய அவசியமில்லை. அல்லேலூயா !
பிரியமானவர்களே, இன்று நம்முடைய எதிரியான “கொரோனா” திரளான தண்ணீர்களைப் போல் இரைச்சலிட்டு நம்மை பயமுறுத்தலாம், சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப் போல நம்மீது மோத எத்தனிக்கலாம் ஆனால் கொரோனாவினால் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்மை ஒன்றுமே செய்ய முடியாது, கொரோனாவை பார்க்கிலும் நம்முடைய கர்த்தர் இயேசு கிறிஸ்து மகா பெரியவராகவும், வல்லமையுள்ளவராகவும் இருக்கிறார். அல்லேலூயா !
ஆகவவே பிரியமானவர்களே, நீங்கள் கொரோனாவின் சத்தத்துக்கு பயப்பட வேண்டாம், அது வெறும் ஓசை தான், நம்முடைய கர்த்தர் வல்லமையுள்ளவர், அவர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர். அல்லேலூயா !
தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment