உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது (1 கொரி 16:14).
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, “நம்முடைய காரியங்களெல்லாம் அன்போடே செய்ய வேண்டும்” என்று வேதம் எங்களுக்கு ஒரு ஆலோசனையைக் கொடுக்கின்றது.
ஆம் பிரியமானவர்களே, நாம் செய்கிற ஒவ்வொரு காரியங்களிலும் அன்பு வெளிப்பட வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமக்கு விரோதமாக காரியங்களை செய்த அத்தனை சகோதரர்களையும் மன்னித்து அவர்களை அன்போடு ஏற்றுக் கொண்டது போல் அவருடைய பிள்ளைகளாகிய நாமும் அவருடைய அரிச் சுவடடை பின்பற்றி சகோதரர்கள் நமக்கு விரோதமாக காரியங்களை செய்யும் போது நாமும் அவர்களை மன்னித்து, அவர்களை அன்போடு ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லேலூயா !
ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment