உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும் (சங் 69:17)
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, தாவீது இந்த 69 வது சங்கீதத்தை தன்னுடைய இக்கட்டான சூழ்நிலையில் கர்த்தரை நோக்கி பாடியிருக்கிறார்.
பிரியமானவர்களே, கர்த்தர் தன்னை தன்னுடைய நெருக்கங்களிலிருந்து விடுவிக்குமாறும், பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் கர்த்தருடைய சமூகத்தில் “உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்” என்று விண்ணப்பம் பண்ணுகிறார். அல்லேலூயா !
ஆம் பிரியமானவர்களே, இன்று இந்த பூலோகத்தில் வாழும் நாம் எல்லாரும் கொரோனா கிருமியின் நிமித்தம் நெருக்கத்திலிருக்கிறோம், பிரியமானவர்களே நாமும் தாவீதைப் போல் கர்த்தருடைய சமூகத்தில் கர்த்தரை நோக்கி “உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்” என்று விண்ணப்பம் பண்ணுவோமா?
அன்று தாவீதின் விண்ணப்பத்தை கேட்டு அவரை அவருடைய எதிரிகளின் கைக்கு விலக்கிப் பாதுகாத்த கர்த்தர் நிச்சயமாய் இன்று உங்களையும், என்னையும் கொரோனாவுக்கும், மற்றும் நம்முடைய எல்லாத் தீங்குக்கும் விலக்கிப் பாதுகாக்க கர்த்தர் வல்லமையுள்ளவராகவும், உண்மையுள்ளவராகவும் இருக்கிறார். அல்லேலூயா !
கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Comments
Post a Comment