கர்த்தாவே, மனுஷனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்? (UK Lockdown - Day 51)

கர்த்தாவே, மனுஷனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்? (சங் 144:3)

மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம் (சங் 144:4)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, கர்த்தர் தாவீதின் மீது அன்பாய், கிருபையாய் இருக்கிறார், அவர் அவருக்கு கோட்டையாய், அரணாய், அடைக்கலமாய் இருந்து அவரை எதிரிகளிடமிருந்து பாதுகாத்து வந்தார். இதெயெல்லாம் தாவீது பார்க்கும் போது அவருக்கு மிகுந்த ஆச்சரியமாய் இருக்கின்றது, தானோ ஒரு பாவி, மாமிசப் பிறவி, கர்த்தரிடமிருந்து அவருடைய கிருபையையும், நன்மைகளையும் பெற்றுக் கொள்ள மனுஷனாகிய தான் எந்த விதத்திலும் பாத்திரவானல்ல, எந்த தகுதியும் இல்லாதவன் என்பதை அவர் உணர்ந்து கர்த்தருடைய சமூகத்தில் தன்னை வெகுவாய் தாழ்த்தி, 

“கர்த்தாவே, மனுஷனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்? மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம்”  (சங் 144 : 3 - 4 ) என்று பாடுகிறார். 

ஆம் பிரியமானவர்களே, மனுஷர்களாகிய நாம் கர்த்தரிடமிருந்து அவருடைய அன்பை, அவருடைய கிருபையை, அவருடைய இரக்கங்களைப் பெற்றுக் கொள்ள எந்த தகுதியும் இல்லாதவர்கள், மனுஷர்களாகிய நாமோ பாவிகள், மனுஷர்களாகிய நாம் மாயைக்கு ஒப்பாயிருக்கிறோம், கர்த்தரோ நித்தியமானவர், அவர் சர்வ வல்லமையுள்ளவர், அவர் நம்மை கவனிக்கிறதற்கும், அவர் நம்மை எண்ணுகிறதற்கும், அவர் நம்மை விசாரிக்கிறதுக்கும் நாம் எம்மாத்திரம்? நாம் எந்த விதத்திலும் கர்த்தரிடமிருந்து நன்மைகளையும், கிருபைகளையும் பெற்றுக் கொள்ள தகுதியில்லாதவர்கள், ஆனால் கர்த்தரோ தம்முடைய அன்பினால், தம்முடைய கிருபையினால், தம்முடைய இரக்கங்களினால் மனு புத்திரர்களாகிய எங்களை பராமரித்து, விசாரித்து, கவனித்து வருகிறார். அல்லேலூயா!

கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?