பயப்படாதே (UK Lockdown - Day 42)

நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் அணுகி: பயப்படாதே என்றீர் (புல 3:57)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, உங்களுடைய  சூழ்நிலை உங்களுக்கு விரோதமாக இருக்கும் போது யாரிடம் உங்களுடைய பிரச்சனைகளை சொல்லுகிறீர்கள்?  மனுஷனிடமா ? தேவனிடமா ? 

பிரியமானவர்களே, மனுஷருக்கு உங்களுடைய பிரச்சனைகளை சொல்லுவதினால் உங்களுடைய கவலைகள், துக்கங்கள் குறையப் போவதில்லை.

ஆனால் கர்த்தர் இயேசுவை நீங்கள் விசுவாசித்து, அவரிடம் உங்களுடைய பிரச்சனைகளை தெரியப்படுத்தும் போது அவர் உங்களை ஆற்றித் தேற்றி அரவணைத்து பயப்படாதே என்று ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவதோடு, உங்களை உங்களுடைய ஆபத்தான சூழ்நிலையிலிருந்து விடுவித்து பாதுகாத்துக் கொள்ளவும் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா !

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?