ஆறு இக்கட்டுகளுக்கு உங்களை நீங்கலாக்கி ; பொல்லாப்பு உங்களை தொடாத வண்ணம் பாதுகாக்கும் கர்த்தர் (UK Lockdown - Day 69)

(கர்த்தர்) ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது (யோபு 5:19)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, யோபுவின் பாவமே அவர் இப்போது இருக்கும் நிலைமைக்கு காரணம் என்று யோபுவை குற்றம் சுமத்தின அவருடைய  சிநேகிதனான எலிப்பாஸ் [வேதம் சொல்லுகிறது “இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை” (யோபு 2 : 10 )] “ கர்த்தர் ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது” என்று சில ஆறுதலான வார்த்தைகளையும் பேசி இங்கே யோபுவை ஆற்றித் தேற்றுவதை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. அல்லேலூயா ! 

ஆம் பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய எங்களுக்கும் வாழ்க்கையில் யோபுவைப் போல உபத்திரவங்கள் வரலாம், துன்பங்கள் வரலாம், பாடுகள் வரலாம், ஆகவே இவ்வாறான நாட்களில் யோபுவின் சிநேகிதர்களைப் போல் நாங்களும் மற்றவர்களைப் பார்த்தும் நீங்கள் செய்த பாவத்தின் நிமித்தம் தான் உங்களுக்கு இந்த வியாதி, இந்த பாடு வாழ்க்கையில் வந்திருக்கின்றது என்று எவரையும் நாம் நியாயம் தீர்க்காமல், அவர்களுடைய கஷடங்களில் நாம் அவர்களுக்கு உதவியாக இருந்து, அந்நாட்களில் அவர்களுக்கு நாம் சில ஆறுதலான வார்த்தைகளையும், நம்பிக்கை கொடுக்கும் உட்ச்சாகமான வார்த்தைகளையும் அன்பாக பேசி கர்த்தர் நம்மை மானிடனாக பூமியில் சிருஷ்டித்ததன் நோக்கத்தை எங்களுடைய வாழ்க்கையில் நிறை வேண்டும். அவ்வாறு செய்து எங்களுடைய வாழ்க்கையில் கர்த்தரை பிரியப்படுத்தும் போது கர்த்தர் இயேசு கிறிஸ்து நம்மில் பிரியப்பட்டு எங்களையும், எங்கள் குடும்பத்தையும் “ஆறு இக்கட்டுகளுக்கு  நீங்கலாகிக்கி;  பொல்லாப்பு எம்மைத் தொடாத வண்ணம் அவருடைய பாதுகாப்பு கரத்தினால் பாத்து காத்துக் கொள்ளுவார். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் கிடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?