கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியை விட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் (எசேக்கி 33:11)
ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் (2 பேதுரு 3:9)
ஒருவனாகிலும், கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல (மத் 18:14)
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, இந்துக்களின் தேவன் கிருஷ்ணன் இந்த பூலோகத்தில் மானிடனாக பிறந்தது துன்மார்க்கனான நரகாசுரனை அழிப்பதட்க்காக என்று இந்து சமய நூல்கள் கூறுகின்றன.
ஆனால் தேவன் இயேசு கிறிஸ்து இந்த பூலோகத்துக்கு மானிடனாக பிறந்ததன் நோக்கம் பாவிகளை / துன்மார்க்கர்களை அழிப்பதட்க்காக அல்ல அவர்களை அவர்களது பாவ வாழ்க்கையிலிருந்து இரட்சிப்பதட்க்காகவே. அல்லேலூயா !
பிரியமானவர்களே, மனுஷர்களாகிய நாம் எல்லாரும் பாவிகள், நம்முடைய பாவங்களுக்கு நாம் மனந்திரும்பும் போது கர்த்தர் தம்முடைய கிருபையினால் நம்மை மன்னித்து, நித்திய ஜீவனைக் கொடுக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா !
பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது, “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் (இயேசு கிறிஸ்து) உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1 யோவான் 1:8-9) அல்லேலூயா !
பிரிரியமானவர்களே, நாம் நம்முடைய பாவங்களுக்கு மனந்திரும்பவில்லையென்றால் நம்முடைய பாவத்தில் நாம் மரித்துப் போய் விடுவோம். அவ்வாறு மனுஷர்கள் தங்களுடைய பாவத்தில் மரித்துப் போவதை கர்த்தர் விரும்பவில்லை.
ஆகவே பிரியமானவர்களே, மற்றவர்களை குறித்து நாம் குறை சொல்லுவதை விட்டு விட்டு, இப்போதே நாம் கர்த்தருடைய சமூகத்தில் நம்மை நாம் ஆராய்ந்து பார்த்து மனந் திரும்புவோம். அல்லேலூயா !
வேதம் சொல்லுகிறது, இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் (யோவா 11:25) என்று. அல்லேலூயா !
தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment