அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் (UK Lockdown - Day 48)

சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள் (எபி 3:12).

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, இங்கே தேவ ஆவியானவர் தேவ பிள்ளைகளாகிய நமக்கு ஒரு காரியத்தைக் குறித்து எச்சரிக்கிறார், “அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்” என்று. ஆம் அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் நம்மிடத்தில் இருக்கக் கூடாது.

பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது, “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே”  (1 பேது 5:8-9)

பிரியமானவர்களே, பிசாசானவன் இன்று தேவ பிள்ளைகளை தேவனிடத்திலிருந்து பிரிப்பதட்க்கு அநேக உத்திகளை கையாண்டு வருகின்றான், அவைகளில் பிரதானமானது   அவிசுவாசம். 

பிரியமானவர்களே, நீங்கள் எப்போதாவது சூழ்நிலை உங்களுக்கு நேர் எதிராக இருக்கும் போது  இது சாத்தியமல்ல, இந்த காரியம் என்னுடைய வாழ்க்கையில் கை கூடி வர போவதில்லை என்று நினைத்ததுண்டா? அப்படி நீங்கள் நினைத்திருப்பீர்களென்றால், இப்படிப் பட்ட அவிசுவாசமுள்ள இருதயத்தை உங்களுக்குள் கொண்டுவந்தவன் பிசாசானவனே. எச்சரிக்கையாயிருங்கள். இல்லையெனில் நாளடைவில் உங்களுக்குள்ளே இருக்கும் அவிசுவாசம் உங்களை தேவனிடத்திலிருந்து பிரித்து விடும். 

பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது, பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான் (யாக் 4:7) என்று. 

பிரியமானவர்களே, “அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம்” நம்மிடத்தில் இருக்கக் கூடாது, தேவனுடைய நன்மைகளை ருசித்த இஸ்ரவேல் ஜனங்கள் நாளடைவில் தேவனை விட்டு தூர விலகிப் போவதட்க்கு அவர்களுடைய அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயமே காரணமாய் இருந்தது. 

பிரியமானவர்களே, நம்முடைய தேவனால் முடியாத காரியம் என்று சொல்லிக் கொள்ள ஒன்றுமேயில்லை, வேதம் சொல்லுகிறது “தேவனாலே எல்லாம் கூடும்” (மத் 19:26) என்று. 

ஆகவே பிரியமானவர்களே, இப்பொழுது உங்களுக்குத் தெரியும் உங்களுக்குள் அவிசுவாசத்தை கொண்டு வருபவன் யாரென்று. ஆகவே அடுத்த முறை அவன் உங்களுக்குள் அவிசுவாசத்தை கொண்டு வராத படி அவனுக்கு நீங்கள் எதிர்த்து நில்லுங்கள், அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?