நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும் (UK Lockdown - Day 63)

என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும் (ஏசா 48:13)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, “என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்“ என்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் கூறுவதன் மூலமாய் தான் சர்வ வல்லமை நிறைந்தவர் என்றும் தன்னால் செய்ய முடியாத காரியம் என்று ஒன்றுமில்லை, தான் வானத்தையும், பூமியையும் அதில் உள்ளவை யாவற்றையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறேன் என்பதை அவர் அவர்களுக்கு தெளிவுபடுத்துகிறார். அல்லேலூயா ! 

ஆம் பிரியமானவர்களே, நம்முடைய சூழ்நிலை நமக்கு நேர் எதிரிடையாக இருந்தாலும்  கர்த்தர் தம்முடைய கரத்தை நம்மேல் நீட்டிருக்கும் போது நாம் எதைக் குறித்தும் சிந்திக்கவோ, பயப்படவோ, கலக்கம் அடையவோ வேண்டிய அவசியமில்லை, கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுவார், அவர் சகலத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அல்லேலூயா ! 

கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பெலத்தையும், சக்தியையும் தரும் தேவன்