நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான் (UK Lockdown - Day 44)

நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான் (சங் 64:10).

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, தாவீது இந்த 64 வது சங்கீதத்தை தான் எதிரிகளினால்  நெருக்கப்பட்டு, அவர்களினால் துன்புறுத்தப்பட்டு இருந்த ஒரு சூழ்நிலையில் எழுதியிருக்கிறார். 

பிரியமானவர்களே, அன்று தாவீது எதிரிகளினால் நெருக்கப்பட்டு, அவருடைய சூழ்நிலை அவருக்கு எதிராக இருந்த போதிலும், அந்த எதிடையான சூழ்நிலைகளினால் கர்த்தர் மீது அவர் வைத்திருந்த அன்பிலிருந்து பிரிக்க முடியவில்லை என்பதட்க்கும், அவர் எப்போதும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருந்து, கர்த்ரையே நம்பியிருந்தார் என்பதட்க்கும் சங்கீதம் 64 :10 ஆதாரமாக இருக்கின்றது, அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, இன்றைக்கு உங்களுடைய சூழ்நிலையும் தாவீதை போல் உங்களுக்கு எதிராக இருக்கின்றதா?

கவலைப்படாதீர்கள், நீங்களும் தாவீதை போல்  உங்களுடைய எதிரிடையான சூழ்நிலையிலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருந்து, அவரை நம்புவீர்களானால் கர்த்தர் உங்களுடைய எதிரிடையான சூழ்நிலையையும் உங்களுக்கு சாதகமாக மாற்றித் தர அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா !

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Comments