வீண்புகழ்ச்சி, கோபமூட்டுதல், ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொள்ளுதல் (UK Lockdown - Day 47)

வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம் (கலா 5:26).

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் “வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்க வேண்டும்” என்று வேத வசனம் நம்மை எச்சரிக்கின்றது. 

பிரியமானவர்களே, மனுஷரிடத்தில் இருந்து வருகின்ற புகழ்ச்சி வீண் புகழ்ச்சியாகவே இருக்கின்றது, மனுஷன் இன்றைக்கு உங்களை புகழுவான் அதே மனுஷன் நாளைக்கு உங்களை இழிவாக பேசுவான், அது மனுஷனுடைய இயற்கயான சுபாவம். ஆகவே நீங்கள் மனுஷன் உங்களை புகழ வேண்டும் என்று கர்த்தருடைய ஊழியத்தை செய்வீர்களானால் ஒருநாள் வெட்கப்பட்டு போய் விடுவீர்கள். பிரியமானவர்களே நீங்கள் மனுஷனிடமிருந்து வரும் வீண் புகழ்ச்சியை விரும்பாதீர்கள். அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, அது மாத்திரமல்ல நாம் ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்க வேண்டும் என்றும் வேதம் நம்மை எச்சரிக்கின்றது.

பிரியமானவர்களே, வீண் புகழ்ச்சியை விரும்புதல், ஒருவரையொருவர் கோபமூட்டுதல், ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொள்ளுதல் இவைகள் எல்லாம் தேவனிடமிருந்து வருபவைகளல்ல, இவைகள் எல்லாம் பிசாசின் கிரியைகள். 

ஆகவே பிரியமானவர்களே, நீங்கள் வேத வசனத்துக்கு கீழ் படிந்து இப்படிப் பட்ட காரியங்களை உங்களிடமிருந்து அகற்றிப் போட்டு, “நாம் நிமிடத்தில் அன்பு கூறுகிறது போல் பிறரிடத்திலும் அன்பு கூறுவோம்” அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?