கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார் (UK Lockdown - Day 64)

என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார் (மீகா 7:8)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய உங்களுக்கும், எனக்கும்  எதிராக இன்று பிசாசானவன் செயல்பட்டு வருகிறான், அவனது நோக்கமே எங்களை  கர்த்தரிடம் இருந்து பிரித்து வாழ்க்கையில் வீழ்த்துவதே, அவன் நாங்கள் எப்போது விழுந்து போவோம் என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறான். 

பிரியமானவர்களே, நீதிமான் 24:16 இவ்வண்ணமாய் சொல்லுகின்றது “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்” என்று. ஆகவே பிரியமானவர்களே வீழ்ந்து விட்டேனே என்று சோர்ந்து போகாதீர்கள், கர்த்தருடைய பிள்ளைகள் வாழ்க்கையில் ஒரு போதும் தோற்றுப் போவதில்லை. அல்லேலூயா!

ஆகவே பிரியமானவர்களே, சூழ்நிலை உங்களுக்கு விரோதமாக இருக்கும் போது இன்றையிலிருந்து அவிசுவாச வார்த்தைகளை பேசுவதை நிறுத்தி விட்டு கர்த்தர் இயேசு உங்களுக்கு கொடுத்திருக்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி, உங்களுக்கு விரோதமாக இருக்கும் சூழ்நிலையை பார்த்து சூழ்நிலையை எதிர்த்து “என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் இயேசு கிறிஸ்து எனக்கு வெளிச்சமாய் இருக்கிறார் என்று அதிகாரத்தோடு பேச வேண்டும். அல்லேலூயா ! 

கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.


Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?