நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது நாமத்திற்குக் காத்திருப்பேன் (சங் 52:9)
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, தாவீது இந்த சங்கீதத்தை எழுதியிருக்கிறார்.
பிரியமானவர்களே, இந்த வசனத்தை நான் மூன்று பகுதிகளாக உடைக்க விரும்புகின்றேன்.
1. நீரே (கர்த்தரே) இதைச் செய்தீர்
2. உம்மை (கர்த்தரை) என்றென்றைக்கும் துதித்து
3. உமது (கர்த்தருடைய) நாமத்திற்குக் (வேளைக்காக) காத்திருப்பேன்
பிரியமானவர்களே, தாவீது வாழ்க்கையில் ஜெயிப்பதட்க்கு இந்த மூன்று காரியங்களே காரணமாயிருந்தது. தாவீது, கர்த்தர் தம்முடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளை, கிரியைகளை நினைத்து அவருக்கு அவர் நாள்தோறும் நன்றி செலுத்தி அவரைத் துதித்து அவருடைய வேளைக்காக பொறுமையோடு காத்திருந்தார். அல்லேலூயா !
பிரியமானவர்களே, தாவீதை போல் நாமும் கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளை, அதிசயங்களை நினைத்து அவருக்கு ஒவ்வொருநாளும் நன்றி செலுத்தி, அவரைத் துதித்து அவருடைய வேளைக்காக பொறுமையோடு காத்திருக்க வேண்டும். அல்லேலூயா !
பிரியமானவர்களே, கர்த்தருடைய வேளைக்காகக் காத்திருக்கிறவர்கள் பாக்கியவான்கள், தாவீது கர்த்தருடைய வேளைக்காக காத்திருந்ததினால் கர்த்தர் அவரை ஆசிர்வதித்தார். அல்லேலூயா !
பிரியமானவர்களே, எல்லாவற்றுக்கும் ஒரு காலமுண்டு, நீங்களும் தாவீதை போல் கர்த்தருடைய வேளைக்காக காத்திருக்கும் போது கர்த்தர் உங்களுடைய இறுக்கமான சூழ்நிலையை மாற்றி அவர் உங்களுடைய வாழ்க்கையில் ஜெயத்தைக் கட்டளையிட உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா !
கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment