என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது (UK Lockdown - Day 65)

ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை (சங் 38:9)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, தாவீது பாடுகளுக்கூடாய் கடந்து சென்ற போது அவர் கர்த்தருடைய சமூகத்தில் தன்னுடைய பாரங்களை விசுவாசத்தோடு இறக்கி வைக்கிறார். அவர் சொல்லுகிறார் “ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை” என்று. அல்லேலூயா ! 

ஆம் பிரியமானவர்களே, கர்த்தருக்கு மறைவானது என்று சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை, சகலதும் அவருக்கு முன்பாக நிர்வாணமாய் இருக்கின்றது, இங்கே தாவீதின் தவிர்ப்பும், அவருடைய தேவைகளும் கர்த்தருக்கு மறைவாயிருக்கவில்லை, கர்த்தர் சகலத்தையும் அறிந்திருந்தார், தாவீதுக்கு எதை எப்போது கொடுக்க வேண்டும் என்பதையும் கர்த்தர் அறிந்திருந்தார். அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, நீங்களும் தாவீதை போல் உங்களுடைய அங்கலாய்ப்புக்களை, ஏக்கங்களை கர்த்தருடைய சமூகத்தில் கொட்டித் தீர்த்து விடுங்கள், தாவீதுக்கு உதவி செய்த தேவன் நிச்சயமாய் உங்களுக்கும் அவர் உதவி செய்ய உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! 

கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.


Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பெலத்தையும், சக்தியையும் தரும் தேவன்