என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர் (UK Lockdown - Day 46)

உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர் (சங் 31:22)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத  வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, தாவீது வாழ்க்கையில் நெருக்கங்களுக்கூடாகவும், பாடுகளுக்கூடாகவும், உபத்திரவங்களுக்கூடாகவும் கடந்து சென்ற போது அவர் மனக்கலக்கத்தில் “உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன்” என்று வாழ்க்கையில் முதன் முறையாக அவிசுவாச வார்த்தைகளை பேசுகிறார், தாவீது மனக்கலக்கத்தில் அவிசுவாச வார்த்தைகளைப் பேசினாலும் அவர் கர்த்தரை விட்டு விலகிப் போகவில்லை, கர்த்தரை நோக்கி ஜெபிக்கிறார், கர்த்தரும் தாவீதுக்கு தன்னுடைய முகத்தை மறைக்காமல் மனமிரங்கி தாவீதுடைய விண்ணப்பத்துக்கு செவி கொடுக்கிறார். அல்லேலூயா !

பிரியமானவர்களே, தாவீதைப் போல நாங்களும் எங்களுக்கு நேரிட்ட நெருக்கத்தின் நிமித்தம் ஒருவேளை மனக்கலக்கம், மனஅழுத்தமடைந்தாலும் கர்த்தரை விட்டு  விலகிப் போகாமல் நெருக்கத்தின் மத்தியிலும் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்யும் போது கர்த்தர் நம் மீது மனமிரங்கி நம்முடைய விண்ணப்பத்துக்கு செவி கொடுத்து எங்களையும் எங்களுடைய சூழ்நிலையிலிருந்து விடுவிக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா !

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 


Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?