கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும் (புல 3:49)
என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது (புல 3:50)
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, யூதா ஜனங்கள் அந்நிய தேசத்தில் சிறைக் கைதிகளாக இருந்த போது அவர்களுடைய இருதயம் கவலையினாலும், கண்ணீரினாலும் நிறைந்திருந்தது, இந்த சூழ்நிலையில் தான் கர்த்தருடைய தீக்கதரிசியான எரேமியா "கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும் என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது" என்று சொல்லுகிறார்.
ஆம் பிரியமானவர்களே, அன்று யூதா ஜனங்கள் இருந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் தான் இன்று இந்த பூலோகத்தில் வாழும் நாம் ஒவ்வொருவரும் கொள்ளை நோயாகிய கொரோனா நிமித்தம் நம் எல்லாருடைய இருதயமும் பயத்தினாலும், திகிலினாகிலும், துக்கத்தினாலும் நிறைந்திருக்கிறது.
பிரியமானவர்களே, கர்த்தருடைய சமூகத்தில் நாம் இடைவிடாமல் அவருடைய இரக்கங்களுக்காகவும், கிருபைக்காகவும் காத்திருப்போமானால் கர்த்தர் நம் மீது மனதுருகி தம்முடைய கிருபையினாலும், இரக்கங்களினாலும் பூலோகத்திலிருக்கும் நம்மை நோக்கிப் பார்ப்பார். அவ்வாறு அவர் பரலோகத்திலிருந்து பூலோகத்திலிருக்கும் நம் ஒவ்வொருவரையும் நோக்கிப் பார்க்கும் போது நம்முடைய சஞ்சலங்களும், பாடுகளும், வேதனைகளும், கவலைகளும், குறைவுகளும், உபத்திரவங்களும் நம்மை விட்டு நீங்கிப் போகும். அல்லேலூயா !
கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment