ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? (UK Lockdown - Day 41)

ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? (புல 3:37). 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, கர்த்தருடைய தீர்க்கதரிசி நெருக்கத்திலிருந்த யூதா குடிகளையும், எருசலேம் ஜனங்களையும் பார்த்துச் கேட்க்கிறார் “ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?” என்று. 

ஆம் பிரியமானவர்களே, அன்று யூதா ஜனங்களுக்கு சூழ்நிலை விரோதமாக இருந்தது போல, நம்முடைய சூழ்நிலைகளும் நமக்கு எதிராக, ஒரு அடைக்கப்பட்ட நிலையில் இருக்கின்ற இந்நாட்களில் அநேக கள்ளத் தீர்க்கதரிசிகள் உருவாகியுள்ளனர், இவர்கள் ஒரு குறிப்பிடட காலத்தை, ஒரு நாளை கூறி இந்த நாட்களில் கொரோனா அழிந்து போய் விடும் என்று கூறுகிறார்கள். 

பிரியமானவர்களே, தங்களுடைய பெயர்களை பிரசித்தப்படுத்துவதட்க்காக கர்த்தர் சொன்னார் என்று பொய்யாக இயேசுவின் நாமத்தில் தீர்க்க தரிசனம் உரைக்கும் கள்ளத் தீர்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் கொரோனா அழியும்  என்று சொல்லுகிறவன் யார்? 

பிரியமானவர்களே, இன்று நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களென்றால் அது கர்த்தருடைய கிருபை. 
ஆகவே பிரியமானவர்களே, கர்த்தரை விசுவாசித்து கர்த்தருடைய வேளைக்காக, அமைதியாய் காத்திருங்கள், கர்த்தர் அவருடைய வேளையில் கொரோனாவை அழிக்க உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?