என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்

அதற்கு அவர் (கர்த்தர்) : என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார். (யாத்தி 33 : 14 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தர், எகிப்தின் அடிமைத் தனத்தில் இருந்த தன்னுடைய பிள்ளைகளாகிய இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமை தனத்தில் இருந்து விடுவிக்கவும், அவர்களை தான் வாக்குப் பண்ணின பாலும், தேனும் ஓடுகிற கானான் தேசத்துக்குள் அவர்களை வழிநடத்திச் செல்லவும் மோசேயை அவர்களுக்கு தலைவனாக எழுப்பியிருந்தார், மோசேயும் கர்த்தருடைய சமூகத்தில் காத்திருந்து ஜெபித்து கர்த்தர் கொடுக்கும் ஆலோசனைப்படி இஸ்ரவேல் ஜனங்களை  எகிப்தில் இருந்து கானானை நோக்கி வழி நடத்தி வருகின்றார், இவ்வாறான சூழ்நிலையில் தான் கர்த்தருடைய சமூகத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்காக பரிந்து பேசும் போது கர்த்தர் மோசேயிடம் ‘என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்று கூறுகின்றார். அல்லேலூயா ! ஆம் பிரியமானவர்களே, மோசே கர்த்தருடைய சமூகத்தின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்திருந்தார், அதனால் தான் அவர் சொன்னார் ‘ உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும் (33 : 15 ). என்று. அல்லேலூயா ! நாங்களும் மோசேயைப் போல கர்த்தருடைய பிரசன்னத்தை, சமூகத்தை வாஞ்சிக்க வேண்டும், கர்த்தருடைய சமூகம் நம் முன் செல்லுமானால், நமக்கு முன்பாக இருக்கும் தடைகள் உடைத்தெறியபடும், மதில்கள் விழும், தேவைகள் சந்திக்கப்படும், போகிற இடெமெல்லாம் மனித கண்களில் தயவு கிடைக்கும், பாதுகாப்பு கிடைக்கும், ஜெயம்  கிடைக்கும், நாம் எதைக் குறித்தும் கவலைப்படத் தேவையில்லை. அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.  

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?