உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்

பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள் (கொலோ 3:21). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தேவனாகிய கர்த்தர் பெற்றோர்களுக்குக் கொடுக்கும் ஆலோசனை ‘ உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி,  அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்’ என்று. ஆம் பிரியமானவர்களே, பெற்றோர்களாகிய நமக்கு தேவன் அதிகாரம் கொடுத்திருக்கிறார் ஆனால் அந்த அதிகாரத்தை நாம் பிழையாக,  கொடூரமாக பயன்படுத்தி விடக்கூடாது, நாங்கள் அவர்களை அதிகமாக கோபமூட்டக் கூடாது, நாங்கள் அவர்களை அதிகமாக கோபமூட்டும் போது, அவர்கள் மீது எப்போதும் எரிந்து விழும் போது, அவர்கள் திடனற்றுப் போவார்கள். வேதம் சொல்லுகிறது, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் (சங் 127:4) என்று. அவர்களை தேவன் நமக்கு ஆசீர்வாதமாக கொடுத்திருக்கிறார். ஆகவே பிரியமானவர்களே,     உங்களுடைய பிள்ளைகள் மீது நீங்கள் எப்போதும் எரிந்து விழாமல், நீங்கள் அவர்கள் மீது எப்போதும் கோபமான வார்த்தைகளைப் பேசி விடாமல், உங்களுடைய பிள்ளைகளை நீங்கள் அன்போடும், பாசத்தோடும், கரிசையோடும், ஒழுக்கமாகவும் வழக்க வேண்டும். அல்லேலூயா ! அதே வேளை பிள்ளைகளே, பிள்ளைகளாகிய உங்களுக்கும் தேவன் ஒரு ஆலோசனையைக் கொடுக்கிறார் ‘  பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக்காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது (கொலோ 3:20) என்று. ஆகவே பிள்ளைகளே நீங்களும் உங்களுடைய பெற்றாருக்கு எல்லாக்காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, அவர்களை நீங்கள் கனப்படுத்தும் போது ( யாத் 20:12) தேவன் உங்களில் பிரியப்படுவார். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?