கர்த்தர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்

அவர் (கர்த்தர்) சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும் (சங் 33:9). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே. , தேவன் வார்த்தையினால் சர்வலோகத்தையும் சிருஷ்ட்டித்தார். அவருடைய வார்த்தையில் வல்லமையுள்ளது. அந்த தேவன் இயேசு இந்த பூலோகத்தில் வாழ்ந்த நாட்களில் ஒரு நாள் கடலில் தன்னுடைய சீஷர்களோடு பயணித்துக் கொண்டிருந்த போது எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்று சொன்ன போது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டானது என்று வேதத்தில் வாசிக்கிறோம் ( மாற்கு 4:39). அவருடைய வார்த்தையில் வல்லமையிருக்கின்றது. காற்றையும், கடலையும் அதட்டி அமைதிப் படுத்திய கர்த்தரால் கடலைப் போல் தத்தளித்து கொந்தளித்துக் கொண்டிருக்கிற உங்களுடைய வாழ்க்கை சூழ்நிலையையும் அமைதல்படுத்த அவரால் முடியும், அவர் ஒரு வார்த்தை உங்களை நெருக்கிக் கொண்டிருக்கிற சூழ்நிலையைப் பார்த்து அமைதலாயிரு என்று சொன்னால் அது ஆகும், அவர் கட்டளையிட்டால் அது நிற்கும். அல்லேலூயா ! ஆகவே பிரியமானவர்களே, உங்களுடைய பிரச்சனையின் மீது உங்களுடைய கவனத்தை செலுத்தாமல் காற்றையும், கடலையும் அமைதல்படுத்திய உங்களை சிருஷ்டித்த, உங்களுடைய பாவங்களுக்காக மரித்த தேவன் இயேசுவின் மீது உங்களுடைய கவனத்தை திருப்பி, இயேசு அப்பா நீங்கள் என்னுடைய பாவங்களுக்காக கல்வாரி சிலுவையில் உங்களுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தி  மரித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தீர்கள் என்பதை நான் விசுவாசிக்கிறேன், நீங்கள் தான் என்னுடைய ஆண்டவரும், இரட்சகரும்,  நீங்கள் ஒரு வார்த்தை என்னுடைய சூழ்நிலையைப் பார்த்து இரையாதே என்று சொன்னால் அது ஆகும் நீங்கள் கட்டளையிட்டால் அது நிற்கும் என்று அறிக்கையிடும் போது தேவன் உங்களுடைய சூழ்நிலையை மாற்ற அவர் வல்லமையுள்ளவராகவும், உண்மையுள்ளவராகவும் இருக்கிறார். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?