Skip to main content
மனுஷனுடைய ஞானத்தினால் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை தேவன் செய்கிறார்

நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார் (யோபு 37:5). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, எலிகூ தேவனுடைய மகத்துவங்களைக் குறித்து, அவருடைய கிரியைகளைக் குறித்துப் பேசும் போது சொல்லுகிறார் ‘ நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை தேவன் செய்கிறார்’ என்று. ஆம் பிரியமானவர்களே, தேவனுடைய ஞானம் அநந்த ஞானம், அவர் சர்வ ஞானமுள்ளவர். மனுஷனுடைய ஞானத்தினால், அறிவினால் சிந்தித்துப் பார்த்து புரிந்து கொள்ள முடியாத, கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை, மகத்துவமான காரியங்களை தேவன் செய்கிறார். தேவனுடைய செயல்களை, அவருடைய கிரியைகளை இவ்ளளவு தான் தேவனால் செய்ய முடியும் என்று எந்த மனுஷனானாலும் மட்டுப்படுத்த முடியாது, அவருடைய கிரியைகள் மனிதனுடைய சிந்தனைக்கு அப்பாட்பட்டது. அல்லேலூயா ! தேவன் இயேசுவை விசுவாசியுங்கள், அவர் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை செய்ய அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார் . அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment