இப்பிரபஞ்சத்தின் தேவனாகிய பிசாசானவன் மனுஷனுடைய மனதை குருடாக்கி வைத்திருக்கிறான்

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான் (2கொரி 4:4). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, மனுஷனுடைய மனதில் கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி பிரகாசமாக இருக்க வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாகவும், திட்டமாகவும் இருக்கின்றது, ஆனால் இருளுக்கு அதிபதியான பிசாசானவன் மனுஷனுடைய மனதை குருடாக்கி அவர்களை அறியாமையினால் வைத்திருக்கிறான். ஆதலால் இவர்களுக்கு சுவிசேஷத்தின் ஒளி பிரகாசமாகத் தெரியவில்லை.  இப்பிரபஞ்சத்தின் அதிபதியான பிசாசானவன் என் மனதையும் ஒரு காலத்தில் குருடாக்கித்தான் வைத்திருந்தான். என்னுடைய மனக்கண்கள் திறக்கப்பட்ட போது எனக்கு 32  வயது. தேவனுக்கு மகிமை உண்டாவதாக. பிரியமானவேகளே, இப் பிரபஞ்சத்தில் பிசாசானவன் அநேகரை குருடாக்கி வைத்திருக்கிறான். அவர்களுக்காக, அவர்களுடைய மனக்ண்களை தேவன்   திறக்கும்படி ஜெபிக்க வேண்டியது விசுவாசிகளாகிய நமது கடமையாகும். தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?