நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ?

நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ? (கலா 4 : 16). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் சத்தியத்தைச் சொல்லும் படியாக அழைக்கப்பட்டிருக்கிறோம். எந்த சூழ்நிலையிலும் நாம் சத்தியத்தை சொல்லாமல் சமரசம் ஆகிவிடக் கூடாது.சத்தியத்தைச் சொன்னதினாலே பவுலுக்கு அநேக சத்துருக்கள் எழும்பினார்கள். ஆனால் அவரை எவையும் சத்தியத்தைச் சொல்லுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதே போல் கர்த்தருடைய ஊழியக்காரராகிய நாமும் கர்த்தர் நமக்குக் கொடுக்கிற வார்த்தையை முகத்தாட்சணீயம் இல்லாமல், பாராபட்ச்சமில்லாமல், மற்றவர்கள் நம்மோடு கோபித்து விடுவார்கள் என்று நினைக்காமல் கர்த்தருடைய சத்தியத்தை உபதேசம் பண்ண வேண்டும். இவ்வாறு நீங்கள் கர்த்தருடைய சத்தியத்தை அதிகமாய் உபதேசிக்கும் போது உங்களுக்கு ஊழியத்தில் அநேக சத்துருக்கள் எழும்புவார்கள், ஆனால் நீங்கள் மற்றவர்களுடைய மனது நோகுமே என்று நினைத்து சத்தியத்தை உபேதசிப்பதை நிறுத்திவிடக்கூடாது, சத்தியத்தை பேசியதன் நிமித்தமே அவர்கள் நம்மை சத்துருக்களாக நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு கர்த்தருக்கு நீங்கள் இன்னும் அதிகமாய் உண்மையாக ஊழியம் செய்ய வேண்டும். அதட்க்காகவே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். அல்லேலூயா ! இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார் (யோவா 8:31-32) ஆகவே பிரியமானவர்களே, சத்தியத்தை இன்னும் அதிகமாய் ஜனங்களுக்குள் எடுத்துச் செல்லுவோம். அல்லேலூயா ! தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?