தேவன் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை

கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று (யோசு 21:45). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, நம்முடைய தேவன் தான் கொடுத்த வாக்குத்தத்தில் உண்மையுள்ளவராக இருக்கிறார். மனுஷர்களாகிய நாங்கள் பல வேளைகளில் நாம் வாக்குப் பண்ணினதை எங்களால் நிறைவேற்ற முடியாமல் போய் விடுகிறது, ஆனால் தேவன் அப்படிப்பட்டவரல்ல எதை நமக்கு செய்வேன் என்று வாக்குப் பண்ணினாரோ அதை அவர் செய்து முடிகிறவராக இருக்கிறார். ‘கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று’ என்று வேதம் சொல்லுகிறது. அல்லேலூயா ! தேவன் ஆபிரகாமின் சந்ததிக்கு கானான் தேசத்தைக் கொடுப்பதாக வாக்குப் பண்ணியிருந்தார், ஆனால் அவர்களுடைய  கீழ்ப்படியாமையின் நிமித்தம் அவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வியும், அலைச்சலும் உண்டாகி தேவனுடைய வாக்குத்தத்தம் அவர்களுடைய வாழ்க்கையில் நிறை வேற  காலதாமதம் ஆனது ஆனால் அது தேவனுடைய தப்பிதமல்ல. தேவன் அவர்களுடைய பிதாக்களுக்கு வாக்குப் பண்ணினதை அவர் அவர்களின் புத்திரர்களின் வாழ்க்கையில் செய்து முடித்தார். அல்லேலூயா ! வேதம் சொல்லுகிறது “ பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?” (எண்ணா 23:19) பிரியமானவர்களே, தேவனுடைய வார்த்தை ஒருபோதும் தவறிப் போனதுமில்லை, போவதுமில்லை. அல்லேலூயா ! கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து  அவருடைய சித்தத்தை நீங்கள் செய்யும் போது கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையிலும் உங்களுக்கு எதைச் செய்வேன் என்று வாக்குப் பண்ணினாரோ அதை செய்து முடிக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?