என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்

ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன் (சங் 84:10 b). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இந்த சங்கீத்தை எழுதிய சங்கீதக்காரன் தான் ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைக் காட்டிலும் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதை தனக்கு மேன்மையாக எண்ணுகிறார்.  ஆகாமியக் கூடாரம் ஆடம்பரமானது, கவர்சீகரமானது, இன்பமானது ஆனால் தாவீதோ நான் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன் என்று சொல்லுகிறார். ஆலயத்தின் வாசற்படியில் பிச்சைக்காரர்கள் தான் வழமையாக உட்க்கார்ந்திருப்பார்கள், அப்போஸ்தலர் 3:2 ல் வாசிக்கிறோம் அப்பொழுது ‘தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டு வந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்’ என்று. தாவீது தேவனுடைய பிரசன்னத்தை வாஞ்சிக்கிறார், ஆதலால் தான் அவர் ஒரு பிச்சைக்காரனைப்போல் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதை தனக்கு மேன்மையாக எண்ணுகிறார். ஆம் பிரியமானவர்களே, தேவ பிரசன்னம் நம்மை சூழ்ந்து கொள்ளும் போது தான் நமக்கு மன நிம்மதியும், ஆறுதலும், சமாதானமும், பாதுகாப்பும் கிடைக்கின்றது. சங்கீதக் காரனைப் போல் நாமும் தேவனுடைய பிரசன்னத்தை வாஞ்சிப்போம். அல்லேலூயா ! தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?