கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்திருக்கிற மனுஷன் பாக்கியவான்

கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான் (எரேமி 17 : 7 - 8 ). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே,  கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்ட மரத்தைப் போல் இருப்பான், இந்த மரம் நல்ல இடத்தில் நாட்டப் பட்டிகிறபடியால் (1)  கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விட்டு எப்போதும் இந்த மரம் உறுதியாய் நிலைத்திருக்கும் - இந்த மரத்துக்குத் தேவையான தண்ணீர் கால்வாயிலிருந்து தாராளமாய் கிடைக்கும், இப்படிப் பட்ட மரத்திற்கு எந்த குறைவும் உண்டாகாது, கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷனுக்கும் இந்த மரத்தைப் போல் தேவையான உணவும், உடையும், பாதுகாப்பும் கர்த்தரிடத்திலிருந்து எப்போதும் கிடைக்கும், அல்லேலூயா !  (2) உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கும் - தண்ணீரண்டையில் நாட்டப்பட்ட மரத்தை கோடைகாலத்து வெயிலின் உஷ்ணம் பாதிக்காது, கோடைகாலத்து வெயிலைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இந்த மரத்தின்  இலைகள் பட்டூப் போவதுமில்லை, காய்ந்து போவதுமில்லை, இந்த மரத்தின் வேர்கள் கால்வாய் ஓரமாக படர்ந்திருக்கிற படியால் இந்த மரத்துக்குத் தேவையான நீர் தாராளமாய்க் கிடைக்கின்றது ஆதலால் இதன் இலைகள் எப்போதும் பச்சைப் பசேல் என்று  பச்சையாயிருக்கும். அல்லேலூயா ! கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷஷனும் இவ்வண்ணமாய் காட்சியளிப்பான், அவனுடைய இருதயம் சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலும் நிறைந்திருப்பதோடு எப்போதும் இலைகள் பசுமையாய் பச்சையாய் இருப்பது போல் இவனுடைய முகம் ஆனந்த கழிப்பினாலும், மகிழ்ச்சியினாலும் நிரம்பியிருக்கும், அல்லேலூயா ! (3) மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனி கொடுக்கிறதாய் இருக்கும் - தண்ணீரண்டையில் நாட்டப்பட்ட மரம் பூமியில் மழை இல்லை என்றாலும், இந்த மரம் தண்ணீரண்டையில் நாட்டப்பட்ட மரம் என்ற படியால் கால்வாயிலிருந்து வேர்கள் மூலமாய் தேவையான சத்து போஷாக்கு கிடைப்பதினால் எப்போதும் கனி கொடுக்கிறதாய் இருக்கும். அல்லேலூயா ! கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷனும் தண்ணீரண்டையில் நாட்டப்பட்ட மரத்தைப் போல் எப்போதும் மற்றவர்களுக்கு  பிரயோஜமுள்ளவனாய், கனி கொடுக்கிறதான ஜீவியமாய் இவனது வாழ்க்கை இருக்கும். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.  

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?